Short News

விவசாயிகளுக்கு ஹனுமான் மந்திரம்: பாஜக தலைவர்!

விவசாயிகளுக்கு ஹனுமான் மந்திரம்: பாஜக தலைவர்!

பேரிடர்கள் மற்றும் வறட்சி உள்ளிட்டவைகளில் இருந்து பயிர்களை காப்பாற்ற ஹனுமான் ஸ்லோகங்கள் சொல்ல வேண்டும் என மத்திய பிரதேச பாஜக தலைவர் ரமேஷ் சக்சேனா தெரிவித்து கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாநில, மத்திய அரசை கையில் வைத்துக்கொண்டு ஹனுமான் ஸ்லோகங்களை சொன்னால் பிரச்சனைகள் சரியாகும் என பாஜக தலைவர் கூறியுள்ளது சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
புவனேஷ்வர்குமார் ஆரம்பித்தது எப்படி?

புவனேஷ்வர்குமார் ஆரம்பித்தது எப்படி?

இந்திய அணியில் தற்போது அசைக்க முடியாது பந்துவீச்சாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார் உ.பி மாநிலத்தை சேர்ந்த புவனேஸ்வர்குமார்.2012ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கிய புவனேஷ் 9 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தை தன் பக்கம் திருப்பினார்.சமீபத்தில் முடிந்த ஐபிஎஸ் போட்டியைஅவருக்கு சாதகமாக மாறிய புவனேஷ் 2017 ஆம் ஆண்டிற்கான பர்பிள் தொப்பியையும் தனதாகினார்.
தங்கம் விலை இன்றும் குறைவு!

தங்கம் விலை இன்றும் குறைவு!

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றை விட ஒரு கிராமுக்கு ரூ.14 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் இன்று ஒரு கிராமுக்கு ரூ.2,922 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.23,376 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.30,690க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.41.20 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.41,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
பைக்கில் காத்திருந்த மனைவியுடன் யாழ். சிறைக் கைதி தப்பி ஓட்டம்!

பைக்கில் காத்திருந்த மனைவியுடன் யாழ். சிறைக் கைதி தப்பி ஓட்டம்!

யாழ்ப்பாணம் சிறைக் கைதி ஒருவர், பைக்கில் காத்திருந்த தன் மனைவியுடன் 6 மாதங்களுக்கு முன் தப்பி விட்டார். அவரை வவுனியா போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். தப்பித்த குற்றத்திற்கான தண்டனை அவருக்கு நாளை வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. அக்கைதியின் மனைவி இன்னும் தலைமறைவாகவே உள்ளார்.