Short News

மகன் பெயிலானதை பார்ட்டி வைத்து கொண்டாடிய தந்தை!

மகன் பெயிலானதை பார்ட்டி வைத்து கொண்டாடிய தந்தை!

ம.பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் சுரேந்திர குமார் வியாஸ்.தனது மகன் பெயிலானதை பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளார்.அவருடை மகன் அசு இந்தாண்டு 10ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தார். இதனால் தனது மனம் நோகாமல் இருக்கவும், அவனை உற்சாகப்படுத்தும் வகையில், உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து கேக் வெட்டி, விருந்து கொடுத்து, பட்டாசு வெடித்து அமர்க்களப் படுத்திவிட்டார்.
மாயனத்தை மீட்க கோரி ஆட்சியரிடம் நடனமாடிய பழங்குடியினர்!

மாயனத்தை மீட்க கோரி ஆட்சியரிடம் நடனமாடிய பழங்குடியினர்!

மயான இடத்தை ஆக்கிரமித்து, தொடர்ந்து மலைவாழ் மக்கள் வாழும் இடத்தையும் ஆக்கிரமித்து வருவதாக கோவையில் வசிக்கும் பழங்குடியின மக்கள் புகார் அளித்தனர். புகார் அளிக்கும் போது இசை கருவிகள் வாசித்து பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனமாடி நூதன முறையில் மனு அளித்தனர். மேலும், இதுகுறித்துபுகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் அப்போது குற்றஞ்சாட்டினர்.
தங்குவதற்கு வீடில்லை, ஆனால் வங்கியில் 170 கோடி பணம் - எப்படி?

தங்குவதற்கு வீடில்லை, ஆனால் வங்கியில் 170 கோடி பணம் - எப்படி?

ஃபாத்திமா இறந்த பிறகு, அவரது உடைமைகளை சோதித்து பார்த்த போது அவரது பையில் மட்டுமே ஐந்து மில்லியன் லெபனான் பணம் இருந்தது அறியப்பட்டது. இதன் இந்திய மதிப்பு 2.25 இலட்சம் ஆகும்.

ஃபாத்திமாவின் பையை துழாவிக் கொண்டிருக்கையில் அதிலிருந்து வங்கி புத்தகம் ஒன்று சிக்கியது. அப்போது தான் ஃபாத்திமாவின் பெயரில் வங்கியில் 170 கோடி லெபனான் பணம் இருந்தது அறியவந்துள்ளது. இதன் இந்திய மதிப்பு 7.5 கோடிக்கும் மேலாகும்.

எஸ்.வி. சேகரை துண்டு பிரசுரங்கள் மூலம் தேடும் பத்திரிகையாளர்கள்!

எஸ்.வி. சேகரை துண்டு பிரசுரங்கள் மூலம் தேடும் பத்திரிகையாளர்கள்!

பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக பேசியதாக பாஜகவை சேர்ந்த எஸ் வி சேகர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தலைமறைவாக உள்ள எஸ் வி சேகர் கண்டுபிடித்து கொடுக்குமாறு கோவை மாவட்ட பத்திரிக்கையாளர்கள் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.துண்டு பிரசுரத்தில் காவல் துறை அதிகாரிகளின் தொடர்பு எண்களும் குறிப்பிடப்பட்டு உள்ளது.