Short News

குஜராத்தில் கனமழை: 5 பேர் பலி!

குஜராத்தில் கனமழை: 5 பேர் பலி!

குஜராத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் மழை காரணமாக நேரிட்ட விபத்து சம்பவங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 1000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், 10 இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழு மீட்பு பணிகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பொழுதுபோக்கு பூங்காவில் விபத்து: சிறுமி பலி!

பாகிஸ்தானின் பொழுதுபோக்கு பூங்காவில் விபத்து: சிறுமி பலி!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருக்கும் பொழுதுபோக்கு பூங்காவில் நடந்த விபத்தில் எட்டு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால் பொழுபோக்கு பூங்காவுக்கு வந்த சிறுமி ராட்டினத்தில் பயணித்தபோது இந்த துரதிஷ்ட சம்பவம் நேர்ந்துள்ளது .
எச்1 பி விசாவை நிராகரிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம்!

எச்1 பி விசாவை நிராகரிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம்!

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் விசா கொள்கை. இந்நிலையில் எச் 1 பி விசாவை நிராகரிக்கும் உரிமையை குடியுரிமை அதிகாரிகளுக்கு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நேரடியாக வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தங்கம், வெள்ளி விலைகள்: மாலை நிலவரம்!

தங்கம், வெள்ளி விலைகள்: மாலை நிலவரம்!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை விலையை விட ஒரு கிராமுக்கு ரூ.3 அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் தற்போது ஒரு கிராமுக்கு ரூ.2,888 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.23,104 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.30,320க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.42.20 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.42,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more