Short News

முன்னாள் நீதிபதி கர்ணன் அரசியல் கட்சி தொடங்கினார்!

முன்னாள் நீதிபதி கர்ணன் அரசியல் கட்சி தொடங்கினார்!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஊழலுக்கு எதிரான புதிய கட்சியை முன்னாள் நிதியரசர் கர்ணன் தொடங்கியுள்ளார். கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற கர்ணன் தமிழகத்தை சேர்ந்தவர். உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக கருத்துக்கள் கூறி சிறை தண்டனை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை அணிக்கு 154 ரன்கள் இலக்கு!

சென்னை அணிக்கு 154 ரன்கள் இலக்கு!

டி20 லீக் கிரிக்கெட் தொடரின் 56 ஆவது ஆட்டத்தில் சென்னை மற்றும் பஞ்சாப்அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி புனோவில் நடைபெறுகிறது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை எடுத்தது. இதனையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க உள்ளது.
காமெடி நடிகரை பாராட்டு மழையில் நனைத்த விஜய்!

காமெடி நடிகரை பாராட்டு மழையில் நனைத்த விஜய்!

நயன்தாரா கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் "எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி" என்ற பாடல் வெளியாகி Youtube யில் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்நிலையில், இந்த பாடலை பார்த்த நடிகர் விஜய் யோகி பாபுவை மிகவும் பாராட்டினாராம். யோகி பாபு விஜய் 62 படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 
"எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி" அட்ட காபி!

"எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி" அட்ட காபி!

நயன்தாரா கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் "எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி" என்ற பாடல் வெளியாகி Youtube யில் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்த பாடல் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் Feeling Me என்ற ஆங்கில பாடலின் அப்பட்டமான காபி என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.