Short News

எங்களை ஆட்சி அமைக்க விடுங்க- குலாம்நபி ஆசாத்

எங்களை ஆட்சி அமைக்க விடுங்க- குலாம்நபி ஆசாத்

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை என்பதால் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி அமைத்து ஆட்சியை போராடி வருகிறது. இந்நிலையில், உச்சநீதிமன்ற முந்தைய தீர்ப்புப்படி ஜேடிஎஸ்- காங்கிரஸை ஆளுநர் அழைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார். மேலும், பாஜக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசுவதை தடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்
கடைசி டி20லீக்: பஞ்சாப்பை வீழ்த்தி மாஸ் காட்டிய சென்னை!

கடைசி டி20லீக்: பஞ்சாப்பை வீழ்த்தி மாஸ் காட்டிய சென்னை!

புனேயில் நடைபெற்ற டி20 லீக் தொடரின் 56 ஆவது மற்றும் கடைசி லீக் போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை எளிதில் வீழ்த்தி மாஸ் காட்டியது. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை, 19.1 ஒவரில் வெற்றி இலக்கை எட்டியது. இதில் ரெய்னா 61, சாஹர் 39 ரன்களும் விளாசினர்.
இன்றைய சென்னை வானிலை!

இன்றைய சென்னை வானிலை!

சென்னையில் இன்று காலை முதலே வெயில் சுட்டெரித்து வருகிறது. காலை 8.30 மணிக்கு 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இன்று பகலில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரையும், இரவில் குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை பதிவாகும். இன்று சில மேகக் கூட்டங்களுடன் வெயில் நன்றாகவே கொளுத்தும். இன்றைய சூரிய உதயம்: காலை 05:42, மறைவு: மாலை 06:29; சந்திர உதயம்: காலை 11:23, மறைவு: நள்ளிரவு 12:19.
கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு 10 பேர் பலி!

கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு 10 பேர் பலி!

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிபா வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் மூளைச்சாவு நிலை ஏற்படும் பின்னர் உயிரிழப்பு ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது நிபா வைரஸ் காய்ச்சலால் அப்பகுதி மக்கள் பீதியடைந்து வருகின்றனர்.