Short News

கேரளா டூர் போறீங்களா? உஷார், வெளுக்கப் போகிறது கனமழை!

கேரளா டூர் போறீங்களா? உஷார், வெளுக்கப் போகிறது கனமழை!

கேரள மீனவர்களுக்கும் அங்குள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு வானிலை மையம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. நாளை முதல் கேரளாவின் பல பகுதிகளிலும் 14 முதல் 20 செ.மீ. வரை மழை வெளுக்கும் என்பதே அந்த எச்சரிக்கை. லட்சத்தீவு அருகே உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்தான் இதற்குக் காரணம். சுற்றுலாப் பயணிகளோ மீனவர்களோ கடற்கரைப் பகுதிகளுக்கோ கடலுக்குள்ளோ செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஃபேஸ்புக் தயாரிக்கும் சாட்டிலைட்!

ஃபேஸ்புக் தயாரிக்கும் சாட்டிலைட்!

உலகம் முழுவதும் சீரான இணையதள சேவையை வழங்க ஒரு செயற்கைக்கோளைத் தயாரித்து வருகிறதாம் பிரபல சமூகவலைத்தள நிறுவனமான ஃபேஸ்புக். Athena என்ற பெயரில் உருவாகி வரும் இந்த செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விண்ணில் ஏவப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகவல்களை ஃபேஸ்புக்கும் உறுதி செய்துள்ளது.
உங்கள் கிட்னியை சுத்தம் செய்யும் 9 மூலிகைகள்...

உங்கள் கிட்னியை சுத்தம் செய்யும் 9 மூலிகைகள்...

உங்கள் கிட்னியை சுத்தம் செய்யும் 9 மூலிகைகள்...
நம்மில் அதிக பேர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தையே ஏதோ வேண்டா வெறுப்பாக செய்கின்றோம். தண்ணீர் அதிகம் குடிக்கவில்லை என்றால் அது உங்கள் கிட்னியை பெரிதும் பாதிக்கும். கிட்னி சரியாக வேலை செய்யவில்லை என்றால் உங்கள் ஜீரண மண்டலம் பாதிப்படைந்த, உணவு சாப்பிட முடியாத அளவிற்கு பல உடல் சார்ந்த கோளாறுகளை ஏற்படுத்தும். அத்தோடு உயிரையும் கேள்விக்குறியாக மாற்றிவிடும்.

சபாநாயகரை சந்தித்த துரைமுருகன்!

சபாநாயகரை சந்தித்த துரைமுருகன்!

தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் சபாநாயகர் தனபாலை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. துரைமுருகன் சபாநாயகரை சந்தித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more