Short News

காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: ராணுவ வீரர் வீர மரணம்!

காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: ராணுவ வீரர் வீர மரணம்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி எல்லை பகுதியில் இந்திய ராணுவம் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார். தற்போது பாகிஸ்தான் வீரர்களின் தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது
கனடா: பாதசாரிகள் மீது டிரக் மோதி 9 பேர் பலி!

கனடா: பாதசாரிகள் மீது டிரக் மோதி 9 பேர் பலி!

கனடாவின் டொரண்டோ நகரில் பாதசாரிகள் கூட்டத்திற்குள் ஒரு டிரக் வேகமாக வந்து மோதியது. இதில் 9 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்; 16 பேர் படுகாயமடைந்தனர். அந்த டிரக்கின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் டொராண்டோவில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ்கோடியில் தொடரும் கடல் சீற்றம்!

தனுஷ்கோடியில் தொடரும் கடல் சீற்றம்!

ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி பகுதியில் தொடர்ந்து 4ஆவது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதையடுத்து அப்பகுதிக்குச் செல்ல அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர். தென் கடல் பகுதிகளில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அப்பகுதி மீனவர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று காலை 7.15 மணிக்குப் பதிவான வெப்பநிலை அளவுகள் (டிகிரி செல்சியஸில்) பின்வருமாறு: சென்னை-29; மதுரை-28; கோயம்புத்தூர்-26; திருச்சி-27; திருநெல்வேலி-25; திண்டுக்கல்-25; ஈரோடு-27; சேலம்-28; சிவகாசி-26; தஞ்சாவூர்-27; தூத்துக்குடி-27; திருப்பூர்-27; வேலூர்-26; ஊட்டி-15; கொடைக்கானல்-15; ஏற்காடு-22; ஏலகிரி-25; வேடந்தாங்கல்-28.