Short News

நான் தான் கிங்.... குமாரசாமி அதிரடி!

நான் தான் கிங்.... குமாரசாமி அதிரடி!

நான் கிங்காகதான் இருப்பேனே தவிர, கிங் மேக்கராக இருக்க மாட்டேன். எப்படியும் சித்தராமையாவை தோற்கடித்தே தீருவேன் என்று கர்நாடகத்தின் முன்னாள் முதல்வரும், கௌடாவின் மகனுமான குமாரசாமி தெரிவித்தார். வொக்கலிகர்கள் மற்றும் வீர சைவர்களின் வாக்குகளை சித்தராமையாவுக்கு எதிராக திருப்ப குமாரசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன. சித்தராமையாவை தோற்கடிப்பதை கௌரவ பிரச்சினையாகவே குமாரசாமி பார்க்கிறார்.
சிரியாவில் அரசுப் படைகள் தொடர் தாக்குதல்!

சிரியாவில் அரசுப் படைகள் தொடர் தாக்குதல்!

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் அரசுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அல் நுஸ்ரா தீவிரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. டமாஸ்கஸின் தெற்குப் பகுதிகளில் இத்தீவிரவாதிகளின் நடமாட்டம் பெரும்பாலும் இருப்பதால், அங்கு கடந்த 2 நாட்களாக விமானப்படைத் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தங்கம் விலை சிறிது குறைவு!

தங்கம் விலை சிறிது குறைவு!

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றை விட ஒரு கிராமுக்கு ரூ.4 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் இன்று ஒரு கிராமுக்கு ரூ.2,994 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.23,952 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.31,450க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.43.00 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.43,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
200 தாண்டிய தோனியின் ஸ்ட்ரைக் ரேட்!

200 தாண்டிய தோனியின் ஸ்ட்ரைக் ரேட்!

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் ஆட்டத்தை கண்டு ரசிகர்கள் உற்சாத்தில் குதித்தனர். 34 பந்துகளை எதிர்கொண்ட தோனி 7 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 70 ரன்கள் குவித்தார். மேலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தோனி அதிரடி சிக்ஸுடன் போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் சராசரி 205.88 இருக்கிறது.