Short News

கர்நாடகாவில் அடுத்த டுவிஸ்ட்: பதவியேற்பு ட்வீட் டெலிட்டானது!

கர்நாடகாவில் அடுத்த டுவிஸ்ட்: பதவியேற்பு ட்வீட் டெலிட்டானது!

கர்நாடகா முதல்வராக எடியூரப்பா நாளை காலை 9.30 மணிக்கு பதவியேற்பார் என பாஜக எம்எல்ஏ சுரேஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக அம்மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமும் இதே தகவலை வெளியிட்டது. ஆனால்,இது தொடர்பான அனைத்து ட்விட்களையும் தற்போது கர்நாடக பாஜக நீக்கியுள்ளதால் எடியூரப்பா நாளை பதவியேற்பரா இல்லையா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நூறு ஆண்டுகளாய் எரியும் தீபம்!

நூறு ஆண்டுகளாய் எரியும் தீபம்!

இமாச்சல பிரதேசத்தில் கங்கிரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஜுவாலா ஜி ஆலயம். இந்த ஆலயத்தில் இருக்கும் தீபம் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக எரிந்து வருகிறது, விஞ்ஞானிகளே வியக்கும்வண்ணம் எரியும் இந்த கோயில் தீபம், விறகு, எண்ணெய் என எந்தவொரு தூண்டு பொருளும் இல்லாமல் எரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. 
வர்த்தக அமைப்பில் அமெரிக்கா மீது இந்தியா புகார்!

வர்த்தக அமைப்பில் அமெரிக்கா மீது இந்தியா புகார்!

இறக்குமதி வரியை உயர்த்திய அமெரிக்காவின் நடவடிக்கை எதிர்த்து தெரிவித்து உலக வர்த்தக அமைப்பில் இந்தியா சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல், அலுமினியம் உள்ளிட்ட உலகோகங்களின் வரியை அமெரிக்கா உயர்த்தி இருப்பதாகவும், இது பெரும் சரிவுக்கு இட்டுச்சென்றுள்ளதாகவும் இந்தியா கூறியுள்ளது.
காஷ்மீரில் மோடி வருகையால் இன்டர்நெட் சேவை நிறுத்தம்!

காஷ்மீரில் மோடி வருகையால் இன்டர்நெட் சேவை நிறுத்தம்!

நேற்று பிரதமர் மோடி அரசு திட்டத்தை திறந்து வைக்க காஷ்மீர் மாநிலத்திற்கு வருகை தந்தார். அவரது காரணமாக பாதுகாப்புக்காக காஷ்மீர் முழுவதும் இன்டர்நெட் சேவை நிறுத்தப்பட்டது. மேலும் காஷ்மீரில் இருக்கும் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பிரதமர் வருகை காரணமாக பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.