Short News

#BREAKING கர்நாடக முதல்வராக எடியூரப்பா நாளை பதவியேற்பு?

#BREAKING கர்நாடக முதல்வராக எடியூரப்பா நாளை பதவியேற்பு?

கர்நாடகாவில் நாளை காலை 9.30 மணிக்கு எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சியமைக்கிறது என்று பாஜக எம்எல்ஏ சுரேஷ்குமார் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வஜுபாய் வாலா, எடியூரப்பாவுக்கு 11 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கர்நாடகா முதல்வராக எடியூரப்பா பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய சென்னை வானிலை!

இன்றைய சென்னை வானிலை!

சென்னையில் இன்று காலை முதலே வெயில் சுட்டெரித்து வருகிறது. காலை 8.30 மணிக்கு 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இன்று பகலில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரையும், இரவில் குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை பதிவாகும். இன்று சில மேகக் கூட்டங்களுடன் வெயில் நன்றாகவே கொளுத்தும். இன்றைய சூரிய உதயம்: காலை 05:42, மறைவு: மாலை 06:29; சந்திர உதயம்: காலை 11:23, மறைவு: நள்ளிரவு 12:19.
கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு 10 பேர் பலி!

கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு 10 பேர் பலி!

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிபா வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் மூளைச்சாவு நிலை ஏற்படும் பின்னர் உயிரிழப்பு ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது நிபா வைரஸ் காய்ச்சலால் அப்பகுதி மக்கள் பீதியடைந்து வருகின்றனர்.
இன்றைய ராசிபலன்!

இன்றைய ராசிபலன்!

ஒவ்வொரு ராசிக்குமான ராசிபலன்களின் விவரங்கள் பின்வருமாறு: மேஷம்-தெளிவு; ரிஷபம்-களிப்பு; மிதுனம்-சினம்; கடகம்-அசதி; சிம்மம்-பரிவு; கன்னி-பாசம்; துலாம்-நிறைவு; விருச்சிகம்-வரவு; தனுசு-லாபம்; மகரம்-நலம்; கும்பம்-பக்தி; மீனம்-மறதி... ராசிக்கேற்ற பலன்கள் கிடைக்க அனைவரையும் வாழ்த்துகிறோம்!