Short News

எடியூரப்பாவுக்கு  7 நாட்களில் ஆப்பு அடித்த மஜத! இது தெரியுமா?

எடியூரப்பாவுக்கு 7 நாட்களில் ஆப்பு அடித்த மஜத! இது தெரியுமா?

கர்நாடக முதல்வராக இன்று பதவியேற்றுள்ள எடியூரப்பா, பெரும்பான்மையை நிரூபித்துக் காட்ட 15 நாட்கள் கூட எனக்கு தேவையில்லை என தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு முன்பு கடந்த 2007ல் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயிக்க முடியாமல், 7 நாட்களில் எடியூரப்பாவின் பாஜக அரசு கலைந்தது. மஜத கட்சியின் ஆதரவு இல்லாமல் 7 நாளில் எடியூரப்பா ஆட்சியை பறிகொடுத்த வரலாறு பாஜகவினர் இன்றும் மறந்திருக்க மாட்டார்கள்!
தங்கம், வெள்ளி விலை: மாலை நிலவரம்!

தங்கம், வெள்ளி விலை: மாலை நிலவரம்!

ஆபரணத் தங்கம் இன்று காலை விலையை விட மாலையில் கிராமுக்கு ரூ.8 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.2,957.00 என விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.23,656 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.31,050க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.42.90 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.49,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
கோழிக்கோட்டில் மட்டுமே நிபா வைரஸ் பாதிப்பு- பினராயி!

கோழிக்கோட்டில் மட்டுமே நிபா வைரஸ் பாதிப்பு- பினராயி!

கேரளாவில் கடந்த 3 நாட்களில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்து வருகின்றனர். இந்நிலையில்," கோழிக்கோடு பகுதியில் மட்டுமே நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இதில், காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்க அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர கண்காணிப்பு அறையும் ஏற்படுத்தப்படுபட்டுள்ளது" என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறினார்.
கடும் சரிவுடன் நிறைவடைந்த பங்குச் சந்தைகள்!

கடும் சரிவுடன் நிறைவடைந்த பங்குச் சந்தைகள்!

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று பங்கு வர்த்தகம் இறக்கத்துடனேயே தொடங்கி கடும் சரிவுடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 300.82 புள்ளிகள் சரிந்து 34,616.13 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 79.70 புள்ளிகள் குறைந்து 10,516.70 புள்ளிகளில் முடிந்துள்ளது.