Short News

‘பெல்லந்தூர் ஏரி' குறித்து தவறான தகவல் அளித்த கர்நாடக அரசு!

‘பெல்லந்தூர் ஏரி' குறித்து தவறான தகவல் அளித்த கர்நாடக அரசு!

கர்நாடக தலைநகர் பெங்களூரு நகரின் மிகப்பெரிய கழிவு நீர் தொட்டியாக உள்ள ‘பெல்லந்தூர் ஏரி' சமீப நாட்களாக அதன் தண்ணீர் பயன்படுத்த முடியாத அளவிற்கு மாசடைந்திருந்தது. மேலும், ஏரியில் இருந்த நுரை பறந்து நகர் பகுதிக்கு வந்ததால் சில நேரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பெல்லந்தூர் ஏரி மாசுதடுப்பு குறித்து தவறான தகவல்களை அளித்த கர்நாடக அரசை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது.
துனிஷியாவை துரத்தி துரத்தி அடித்த பெல்ஜியம்!

துனிஷியாவை துரத்தி துரத்தி அடித்த பெல்ஜியம்!

ரஷ்யாவில் 21ஆவது உலகக் கோப்பை கால்பந்துப்  தொடரின் இன்று நடந்த ஜி பிரிவு ஆட்டத்தில்துனிஷியா- பெல்ஜியம் அணிகள் மோதியது. ஆட்ட நேர முடிவில் துனிஷியாவை பெல்ஜியம் அணி 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ஜி பிரிவில் 6 புள்ளிகளுடன் பெல்ஜியம் முதலிடத்தில் உள்ளது. மேலும், இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக கோல்கள் அடிக்கப்பட்ட போட்டி என்பது குறிப்பிடத்தக்கது
ஷுட்டிங்கில் காயமா? இல்லையா?- தனுஷ் பதில்!

ஷுட்டிங்கில் காயமா? இல்லையா?- தனுஷ் பதில்!

பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், தற்போது ‘மாரி 2' படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நெல்லை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த படப்பிடிப்பில் தனுஷ் அடிபட்டு, ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதற்கு விளக்கமளித்த தனுஷ், "நான் நலமாக இருக்கிறேன், படப்பிடிப்பில் எனக்கு லேசான காயம் தான்" என்று ட்வீட் செய்துள்ளார்
கருணாநிதியே  இனி மீண்டு வந்தாலும் ...? செல்லூர் ராஜூ சவால்!!

கருணாநிதியே இனி மீண்டு வந்தாலும் ...? செல்லூர் ராஜூ சவால்!!

மதுரை ஆரப்பாளையத்தில் நடைபெற்ற காவிரி நதிநீர் உரிமை மீட்புக் கூட்டத்தில் பேசிய அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, அதிமுகவை வீழ்த்த நினைத்தவர்கள் தற்போது வாய்மூடி மெளனியாகிவிட்டார்கள். ஸ்டாலினால் திமுகவில் திமுகவிற்கு தலைவராகக் கூட முடியாது, கருணாநிதியே இனிமேல் மீண்டு வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது" என்று கூறியுள்ளார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more