Short News

கர்நாடக அடுத்த முதல்வர் எடியூரப்பா-பாஜக அறிவிப்பு!

கர்நாடக அடுத்த முதல்வர் எடியூரப்பா-பாஜக அறிவிப்பு!

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க, பாஜக முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பாவிற்கு ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளதாக அம்மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்தின் 24வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்கிறார். நாளை காலை 9.30 மணிக்கு பாஜக பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதற்காக பெங்களூருவில் போலீஸார் யாரும் நாளை விடுப்பு எடுக்கக்கூடாது என உத்தரவு!
ஹாலிவுட் படத்திற்காக தமிழில் பேசி அசத்திய தனுஷ்!

ஹாலிவுட் படத்திற்காக தமிழில் பேசி அசத்திய தனுஷ்!

தனுஷ் கோலிவுட், பாலிவுட் தாண்டி தற்போது ஹாலிவுட்டிலும் கால் பதித்துவிட்டார். இவர் நடிப்பில் ஹாலிவுட் படமான The Extraordinary Journeyof The Fakir படம் ரிலிஸாகியுள்ளது.இப்படத்தின் ப்ரீமியர் காட்சி நேற்று பாரீஸில் கிராண்ட் ரெக்ஸ் சினிமாவில் நடந்தது. அப்போது தனுஷ் மேடையில் தமிழ் பேசி அனைவரும் கவர்ந்தார். மேலும், ஊதுங்கடா சங்கு' பாடலை பாடி அதிர வைத்தார். 
பா. ரஞ்சித் படத்தில் தளபதி விஜய்?

பா. ரஞ்சித் படத்தில் தளபதி விஜய்?

ரஞ்சித் அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி ஆகிய படங்களை இயக்கியவர். அடுத்து இவர் இயக்கத்தில் காலா படம் வரவுள்ளது. இந்த பட ரோமோஷன் நிகழ்ச்சிக்காக இயக்குனர் கலந்துக்கொண்டார். அப்போது நீங்கள் அடுத்தப்படம் விஜய்யுடன் இணைந்து பணியாற்றப்போகிறீர்களா என கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு தயாரிப்பாளர் நீங்கள் என்றால் ஓகே என ஜாலியாக கூறியுள்ளார். 
முரட்டுக்குத்து பாணியில் தமிழில் மற்றொரு படம்!

முரட்டுக்குத்து பாணியில் தமிழில் மற்றொரு படம்!

சர்ச்சை தலைப்புடன் சமீபத்தில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து படம் ரசிகர்கள் மத்தியில் ஹிட் ஆனது. இந்நிலையில் அதே பாணியில் சர்ச்சை தலைப்புடன் ஒரு படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் சஞ்சிதா ஷெட்டி நடித்து வருகின்றனர். படத்திற்கு "பல்லு படாம பாத்துக்க" என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.