Short News

கேரளாவில் பூமிக்குள் மூழ்கிய கிணறு!

கேரளாவில் பூமிக்குள் மூழ்கிய கிணறு!

கேரளா, வயநாட்டில், மனந்தவாடி என்ற இடத்தில் உள்ள 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொதுக் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறு நேற்று முன் தினம் பூமிக்குள் திடீரென மூழ்கியது. கிணற்றுக்கு அடியில் செல்லும் நீரோட்டம் காரணமாக கிணறு பூமிக்குள் மூழ்கியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. கிணறு முழ்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
கிராமத்தை விழுங்கும் பனிப்பறை: பீதியில் மக்கள்!

கிராமத்தை விழுங்கும் பனிப்பறை: பீதியில் மக்கள்!

கிரீன்லாந்து நாட்டில் உள்ளது சிறிய கிராமமான இன்னார்சூட் கிராமம். மீனவர் கிராமமான இங்கு 650 அடி அகலமுள்ள பனிப்பாறை ஒன்று உள்ளது. கடல் மட்டத்தை காட்டிலும் 300 அடி உயரத்தில் உள்ளது. இதன் நீளமோ 2 கால்பந்து மைதானம் அளவுக்கு இருக்கிறது. டன் கணக்கில் பனிப்பாறைகள் குவிந்திருப்பதால் கிராமமே மூழ்கும் அபாயம் உள்ளது.
ஊட்டியில் கனமழையால் மரம் சரிந்து விழுந்து ஒருவர் பலி!

ஊட்டியில் கனமழையால் மரம் சரிந்து விழுந்து ஒருவர் பலி!

ஊட்டியில் கடந்த ஒருவாரமாக பெய்து வரும் கனமழையால் இன்று பிங்கர்போஸ்ட் பகுதியில் திடீரென மரம் சரிந்து விழுந்தது. இதில், அவ்வழியே குடும்பத்துடன் சர்ச்சுக்கு சென்ற மாணவர் இமான் அகஸ்டின் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாணவரின் உடல் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை வருகிறார் சோனியா!

சென்னை வருகிறார் சோனியா!

2019 நாடாளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் பாஜக, காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகின்றன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற தமிழக கட்சிகள் போட்டிப்போட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஜக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி அடுத்த மாதம் தமிழக வருகிறார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more