Short News

திருநாவுக்கரசருக்கு பதிலடி கொடுத்த குஷ்பு!

திருநாவுக்கரசருக்கு பதிலடி கொடுத்த குஷ்பு!

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கும்காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்புவுக்கும் இடையே மோதல் தற்போது உச்சக்கட்டதை எட்டியுள்ளது. இன்று குஷ்பு அளித்த பேட்டியில், நான் நடிகை என்பதால் திருநாவுக்கரசர் என்னை தாறுமாறாக விமர்சிக்கிறார், பல கட்சிகளுக்கும் அவரும் சென்று வந்துள்ளார். திமுகவில் எனக்கு நடந்த சம்பவங்களை இப்போது ஏன் அவர் பேச வேண்டும், அவர் பற்றி லாவணி பேச விரும்பவில்லை" என்றார்
முரட்டுக்குத்து பாணியில் தமிழில் மற்றொரு படம்!

முரட்டுக்குத்து பாணியில் தமிழில் மற்றொரு படம்!

சர்ச்சை தலைப்புடன் சமீபத்தில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து படம் ரசிகர்கள் மத்தியில் ஹிட் ஆனது. இந்நிலையில் அதே பாணியில் சர்ச்சை தலைப்புடன் ஒரு படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் சஞ்சிதா ஷெட்டி நடித்து வருகின்றனர். படத்திற்கு "பல்லு படாம பாத்துக்க" என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 
49 சதவீத சரிவில் டாடா மோட்டார்ஸ்!

49 சதவீத சரிவில் டாடா மோட்டார்ஸ்!

முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் மார்ச் 31 உடன் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் லபாத்தில் சுமார் 49.20 சதவீத லாபத்தில் சரிவடைந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் 4,336.43 கோடி ரூபாயை லாபமாக பெற்ற நிலையில், இந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் வெறும் 2,176.16 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது
யுஎம் ட்யூட்டி 230 பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

யுஎம் ட்யூட்டி 230 பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட பிரபல யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் விரைவில் புதிய க்ரூஸர் மாடல் பைக்கை செப்டம்பரில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த பைக் யுஎம் ட்யூட்டி 230 என்ற பெயரில் வெளியாகிறது. தற்போது 4 க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களையும், ஒரு மின்சார மாடலையும் யுஎம் நிறுவனம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.