Short News

இடஒதுக்கீடு நாட்டுக்கு கேடு: பாஜக அமைச்சர் கண்டுபிடிப்பு!

இடஒதுக்கீடு நாட்டுக்கு கேடு: பாஜக அமைச்சர் கண்டுபிடிப்பு!

இடஒதுக்கீடு என்பது நாட்டுக்கு கேடு என மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக அமைச்சர் கோபால் பார்கவா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தகுதி குறைவானவர்களுக்கு இடம் ஒதுக்குவது என்பது இயற்கைக்கு எதிரானது என அவர் பேசியுள்ளது சிறுபான்மை மக்கள் இடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை சிறிது குறைவு!

தங்கம் விலை சிறிது குறைவு!

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றை விட ஒரு கிராமுக்கு ரூ.4 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் இன்று ஒரு கிராமுக்கு ரூ.2,994 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.23,952 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.31,450க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.43.00 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.43,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
200 தாண்டிய தோனியின் ஸ்ட்ரைக் ரேட்!

200 தாண்டிய தோனியின் ஸ்ட்ரைக் ரேட்!

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் ஆட்டத்தை கண்டு ரசிகர்கள் உற்சாத்தில் குதித்தனர். 34 பந்துகளை எதிர்கொண்ட தோனி 7 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 70 ரன்கள் குவித்தார். மேலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தோனி அதிரடி சிக்ஸுடன் போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் சராசரி 205.88 இருக்கிறது.
ப்ரெஸ்ட் இம்பிளாண்ட் செய்ததால் ஏற்பட்ட வினை, ப்ளேபாய் மாடல் கூறும் அதிர்ச்சித் தகவல்!

ப்ரெஸ்ட் இம்பிளாண்ட் செய்ததால் ஏற்பட்ட வினை, ப்ளேபாய் மாடல் கூறும் அதிர்ச்சித் தகவல்!

ப்ளேபாய் நிறுவனர் ஹக் ஹெப்னர் மனைவியும் மாடல் அழகியுமான கிறிஸ்டல் மார்பக இம்பிளாண்ட் சிகிச்சை மேற்கொண்டவர். ஆனால், அவரது உடலில் சமீப ஆண்டுகளாக ஏற்பட்ட மாற்றத்திற்கு அந்த ப்ரெஸ்ட் இம்பிளாண்ட் காரணத்தால் உண்டான தீய தாக்கங்கள் தான் காரணம் என்பதை ஆரம்பத்தில் கிறிஸ்டல் அறிந்திருக்கவில்லை.

ப்ரெஸ்ட் இம்பிளாண்ட் செய்துக் கொண்ட கிறிஸ்டலுக்கு இதன் காரணத்தால் உடலில் பெரும் நச்சுத் தாக்கம் உண்டானது.