Short News

மெக்கா மசூதி வழக்கு: 5 பேர் விடுதலை!

மெக்கா மசூதி வழக்கு: 5 பேர் விடுதலை!

ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் உரிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரையும் ஹைதராபாத் என்ஐஏ நீதிமன்றம் இன்று விடுவித்தது.கடந்த 2007ம் ஆண்டு ஹைதராபாத் மசூதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 58 பேர் காயமடைந்தனர். இந்த மோசமான குண்டுவெடிப்பிற்கு பின் இந்தியாவில் பல மசூதிகள் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளானது.
டி20 லீக்: பெங்களூரை நசுக்கிய சென்னை!

டி20 லீக்: பெங்களூரை நசுக்கிய சென்னை!

பெங்களூருவில் இன்று நடந்த டி20 லீக் கிரிக்கெட் போட்டியில், பெங்களூர் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அட்டகாசமாக வென்றது சென்னை அணி. 206 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடிய சென்னை அணி, 19.4 ஓவர்களிலேயே 207 ரன்களை எட்டி பெங்களூர் அணியை நசுக்கியது. ஸ்கோர்: பெங்களூர்-205/8 (20); சென்னை-207/5 (19.4)
வெயிலுக்காக நீச்சல் உடை போட்டோவை வெளியிட்ட நடிகை!

வெயிலுக்காக நீச்சல் உடை போட்டோவை வெளியிட்ட நடிகை!

பச்சை கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆன்ட்ரியா. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நீச்சல் குளத்தில் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், அதில் வெயில் காலம் என்று பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
100 ரன்களை தொட்டது சிஎஸ்கே!

100 ரன்களை தொட்டது சிஎஸ்கே!

பெங்களூருவில் நடந்து வரும் 24வது டி20லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரூ அணி, சென்னை அணிக்கு 206 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 12 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. இதில் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு 48 ரன்கள் எடுத்து நிதனமாக ஆடி வருகிறார் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகிறார்.ஸ்கோர்: சென்னை- 113 /4 (13.1 ஓவர்)., பெங்களூரு- 205/8(20ஓவர்)