Short News

நடுக்கடலில் தீப்பற்றிய இந்திய சரக்குக் கப்பல்!

நடுக்கடலில் தீப்பற்றிய இந்திய சரக்குக் கப்பல்!

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான எஸ்.எஸ்.எல் கொல்கத்தா என்ற சரக்குக் கப்பல் இன்று வங்காள விரிகுடா கடல் பகுதியில் சென்றுகொண்டிருக்கும் போது திடீரென தீப்பற்றியது. இந்தத் தீ விபத்திலிருந்து இதுவரை 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 11 பேர் கப்பலில் சிக்கியுள்ளனர். மோசமான கடலின் நிலை மற்றும் வலுவான காற்றினால் தீ வேகமாக மற்ற இடங்களுக்குப் பரவி வருகிறது. 
என்றும் பதினாறாக இருக்க வாழைப்பழ பேசியல்!

என்றும் பதினாறாக இருக்க வாழைப்பழ பேசியல்!

வாழைப்பழத்துடன் வெண்ணெய் கலந்து பசையாக்கி முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவினால் முகத்தை மென்மையாகவும் பொலிவோடும் வைத்திருக்க முடியும். வாழைப் பழத்தை தயிர் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகம் புத்துணர்ச்சியோடு இருக்கும். தேன் மற்றும் வாழைப்பழம் கலந்து முகத்தில் தடவினால் சருமத்தை இளமையாகவும், வறட்சி ஏற்படாமலும் வைத்திருக்கலாம் 
7 முன்னணி இயக்குனர்களுடன் கைகோர்க்கும் சூர்யா!

7 முன்னணி இயக்குனர்களுடன் கைகோர்க்கும் சூர்யா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. தற்போது நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதனைதொடர்ந்து கே.வி.ஆனந்த், ‘இறுதிச்சுற்று' சுதா, கௌதம் மேனன், ‘மாநகரம்' லோகேஷ், ஹரி, பா.ரஞ்சித் என முக்கியமான இயக்குனர்களுடன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஜாகுவார் எஃப்-டைப் எஸ்விஆர் முன்பதிவு ஆரம்பம்!

ஜாகுவார் எஃப்-டைப் எஸ்விஆர் முன்பதிவு ஆரம்பம்!

மிகவும் காஸ்ட்லியான கார் மாடல்களில் ஒன்றாக சொல்லப்படும் ஜாகுவார் எஃப்-டைப் காரின் அதிசெயல்திரன் மிக்க எஸ்விஆர் மாடலுக்கு தற்போது இந்தியாவில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஜாகுவார் ஸ்பெஷல் வெஹிக்கிள் ஆபரேஷன்(SVR) பிரிவின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட ஜாகுவார் எஃப்-டைப் எஸ்விஆர் மாடல் இந்தியாவில் ரூ.2.65 கோடி என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more