Short News

குலுங்கியது அந்தமான்!

குலுங்கியது அந்தமான்!

அந்தமானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவாகி இருந்தது. பூமிக்குக் கீழே 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் சற்றே பீதியான மக்கள் தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். ஆனாலும் இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை.
நடிகையிடம் கெஞ்சிய அஜித்!

நடிகையிடம் கெஞ்சிய அஜித்!

காதல் மன்னன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த நடிகை மானு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில், தான் இந்த படத்தில் நடித்த போது நடிகர் அஜித் தன்னிடம் கெஞ்சியதாக கூறியுள்ளார். உங்களுக்கு படங்களில் நடிக்க விரும்பம் இல்லை என எனக்கு தெரியும். இந்த ஒரு படத்தில் மட்டும் நடித்து கொடுக்கும் படி என்னை அவர் கேட்டுக்கொண்டார் என மனு கூறியுள்ளார்.
அப்பாவான WWF 'ராக்' : வைரலாகும் போட்டோ!

அப்பாவான WWF 'ராக்' : வைரலாகும் போட்டோ!

மல்யுத்த வீரராக இருந்து ஹாலிவுட்டில் நுழைந்தவர் ராக் என்ற டுவெயின் ஜான்சன். இவர் தற்போது ஹாலிவுட்டில் முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ரம்பஜே படம் வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில், இவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரசிகர்களை கவலையில் ஆழ்த்திய பிந்து மாதவி!

ரசிகர்களை கவலையில் ஆழ்த்திய பிந்து மாதவி!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் பிந்து மாதவி. இவருக்கு தற்போது எந்த பட வாய்ப்பும் அமையாததால் கவலையில் உள்ளார். சமீபத்தில், பிந்து மாதவி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில், நேற்று இரவு முழுவதும் தூங்கவே இல்லை என கூறியுள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் என்ன ஆச்சு பிந்து என கேள்வி கேட்டு வருகின்றனர்.