Short News

ஓய்வை அறிவித்த முகமத் கைஃப்!

ஓய்வை அறிவித்த முகமத் கைஃப்!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் முகமத் கைஃப் அறிவித்துள்ளார். கங்குலி காலத்தில் இந்திய அணியில் இணைந்து சிறந்த ஃபில்டிர் என்ற அடையாளத்தை பெற்றவர் முகமது கைஃப். ஐபிஎல் போட்டியில் கடைசியாக பெங்களூரு அணிக்காக கைஃப் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
ஆண்களின் உடலுறவு ஆசையை அழிக்கக்கூடிய காரணங்கள்

ஆண்களின் உடலுறவு ஆசையை அழிக்கக்கூடிய காரணங்கள்

ஆண்கள் ஆண்மையை அதிகரிப்பதில் செலுத்தும் கவனத்தை அது குறையாமல் பார்த்துக்கொள்வதிலும் செலுத்தவேண்டும். ஆண்களின் உணவு மட்டுமின்றி அவர்களை சுற்றியுள்ள பிரச்சினைகளும் அவர்களின் ஆண்மையை பாதிக்கும். உடல் எடை, மதுபழக்கம், டெஸ்டோஸ்ட்ரோன் குறைவு, மனைவியுடனான பிரச்சினை என அனைத்து விஷயங்களும் உங்கள் ஆண்மைக்குறைவுடன் தொடர்புடையதாகும். எனவே முடிந்தளவு இந்த பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே சரிசெய்து கொள்ளுங்கள்.

தமிழகத்தில் 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனை சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. மேலும், சென்னையில் மாலை அல்லது இரவில் இடி மேகங்கள் உருவாகலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் சென்னை வாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 
ஃபேஸ்புக் தயாரிக்கும் சாட்டிலைட்!

ஃபேஸ்புக் தயாரிக்கும் சாட்டிலைட்!

உலகம் முழுவதும் சீரான இணையதள சேவையை வழங்க ஒரு செயற்கைக்கோளைத் தயாரித்து வருகிறதாம் பிரபல சமூகவலைத்தள நிறுவனமான ஃபேஸ்புக். Athena என்ற பெயரில் உருவாகி வரும் இந்த செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விண்ணில் ஏவப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகவல்களை ஃபேஸ்புக்கும் உறுதி செய்துள்ளது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more