Short News

போச்சே, போச்சே: பீல் பண்ண மார்க் ஜூக்கர்பெர்க்!

போச்சே, போச்சே: பீல் பண்ண மார்க் ஜூக்கர்பெர்க்!

சமீபத்தில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் 50 மில்லியன் பயனாளிகளின் கணக்கை திருடியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு பேஸ்புக் அனுமதி வழங்கியது. இதில், தன்னுடைய தகவல்களும் திருடப்பட்டு இருப்பதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் அமெரிக்க நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.
பட்ட பகலில் கொள்ளை... சென்னையில் பரபரப்பு!

பட்ட பகலில் கொள்ளை... சென்னையில் பரபரப்பு!

சென்னை அடையாறில் உள்ள இந்தியன் வங்கியில் துப்பாக்கி முனையில் மர்ம நபர் ஒருவர் வாடிக்கையாளரிடம் இருந்து ரூ. 6 லட்சம் கொள்ளையடிக்க முயன்றார். பணத்துடன் தப்பியோட முயன்ற நபரை காவல்துறையினர் உடனடியாக பிடித்தனர். இதையடுத்து, கைது செய்த அந்த நபரிடம் சாஸ்திரி நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினியை சந்தித்த குருமூர்த்தி!

ரஜினியை சந்தித்த குருமூர்த்தி!

கட்சி தொடங்கவுள்ளதாகக் கூறியிருந்த நடிகர் ரஜினிகாந்த்தை 'துக்ளக்' ஆசிரியர் குருமூர்த்தி சந்தித்துள்ளார். சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில் வைத்து இந்தச் சந்திப்பு நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தது முதல் ரஜினியை பா.ஜ.க.வின் பிம்பம் என அரசியல் கட்சிகள் விமர்சித்துவருகின்றன. இந்நிலையில் இருவரும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நிர்மலாதேவி விவகாரம் : உதவி பேராசிரியர் முருகனிடம் விசாரணை!

நிர்மலாதேவி விவகாரம் : உதவி பேராசிரியர் முருகனிடம் விசாரணை!

நிர்மலா தேவி விவகாரத்தில் தலைமறைவாக இருந்த உதவி பேராசிரியர் முருகன் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். மதுரை காமராஜர் பல்கலை கழகத்திற்கு வருகை பதிவேட்டில் கையெழுத்திட வந்த போது அவரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.