Short News

லிங்காயத்துகளை காக்கா பிடிக்கும் பாஜக, காங்கிரஸ்!

லிங்காயத்துகளை காக்கா பிடிக்கும் பாஜக, காங்கிரஸ்!

கர்நாடகாவில் மே 12ம் தேதி நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. இதில், 40 லிங்காயத்து வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது, இதேபோல், சமீபத்தில் பாஜக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் 21 லிங்காயத் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இதன் மூலம் இரண்டு கட்சி வேட்பாளர் பட்டியலிலும் லிங்காயத் சமூகத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழன் கோழையா?  வைரமுத்து பதில்!

தமிழன் கோழையா? வைரமுத்து பதில்!

சென்னை புத்தகச் சங்கமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவிஞர் வைரமுத்து, தமிழர்கள் கோழை இல்லை, எந்த இடத்தில் இடத்தில் வீரத்தை காட்ட வேண்டுமோ அங்கே காட்டுவான் என்று கூறினார். தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலும், நீட் தேர்விற்கு விலக்கு பெறாமலும் தமிழன் ஓயமாட்டான், அதுவரை போராட்டங்கள் தொடரும் என அவர் கூறியுள்ளார்
கவலையை வெளிப்படுத்திய ரகுல்!

கவலையை வெளிப்படுத்திய ரகுல்!

படங்கள் தோல்வியடைந்தால் நம்மை புறக்கணிக்கிறார்கள் என பிரபல நடிகை ரகுல் பிரித் சிங் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு திரைப்படம் வெற்றியடைவதும், தோல்வியடைவதும் நம் கையில் இல்லை எனக் கூறியுள்ள ரகுல், தோல்வி என்ற ஒரே காரணத்திற்காக அதில் பணி செய்த ஊழியர்களின் உழைக்க குறைந்து மதிப்பிடக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்
எடையை பொருட்படுத்தாத இலியானா!

எடையை பொருட்படுத்தாத இலியானா!

உடல் எடை அதிகரித்துள்ளது குறித்து தனக்கு கவலை இல்லை என நடிகை இலியானா தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடிகை இலியானா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதனைத்தொடர்ந்து நடிகை இலியானா கர்பமாக இருப்பதாக எல்லாம் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.