Short News

ரைசிங் காஷ்மீர் பத்திரிக்கை ஆசிரியர் சுட்டுக்கொலை!

ரைசிங் காஷ்மீர் பத்திரிக்கை ஆசிரியர் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ரைசிங் காஷ்மீர் என்ற பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புஹாரி காரில் சென்ற போது பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இன்று மாலை இவரை தீவிரவாதிகள் சிலர் துப்பாக்கியால் சுட்டதில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். புஹாரி சுட்டுக்கொல்லப்பட்டதற்கு காஷ்மீர் முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதிய சேவையை தொடங்கிய ஏர் இந்தியா!

புதிய சேவையை தொடங்கிய ஏர் இந்தியா!

'மஹாராஜா டேரக்ட்' என்ற புதிய சேவையை ஏர் இந்தியா அறிமுகம் செய்துள்ளது. சொகுசு இருக்கைகளுடன் கூடிய புதிய சீருடைகளின் முற்றிலும் வேறுவதமான அமைப்புடன் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த புதிய முயற்சியின் மூலம் வாடிக்கையாளர்களை கவர முடிவும் என ஏர் இந்தியா நிர்வாகம் நம்புகிறது.
பிளாஸ்டிக் பைப் நிறுவனத்தில் தீ விபத்து!

பிளாஸ்டிக் பைப் நிறுவனத்தில் தீ விபத்து!

சேலம் - சிவதாபுரத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் பைப் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
டாய்லெட் பேப்பரில் மணப்பெண் உடை!

டாய்லெட் பேப்பரில் மணப்பெண் உடை!

அமெரிக்காவில் மணப்பெண் அலங்கார உடைகள் குறித்தான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட ராய் க்ரூஸ் என்பவர் டாய்லெட் பேப்பரில் மணப்பெண் உடை தயாரித்து போட்டியில் வெற்றி பெற்றார். இந்த உடையை உருவாக்குவதற்கு 20 ரோல் டாய்லெட் பேப்பரை உபயோகித்ததாக அவர் கூறியுள்ளார். வெற்றி பெற்ற அவருக்கு 10 ஆயிரம் டாலர் பரித்தொகை கொடுக்கப்பட்டது. 
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more