Short News

உ.பி சட்டசபை முன் சமாஜ்வாதி கட்சி போராட்டம்!

உ.பி சட்டசபை முன் சமாஜ்வாதி கட்சி போராட்டம்!

உ.பியில் காவல்துறையினரால் போலி எண்கவுண்டர்கள் நடத்தப்படுவதாக புகார் எழுந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாதி கட்சியினர் சட்டசபை முன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வளாகத்தில் கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருவதால் அங்கே போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில்  நடக்கும் பாதி என்கவுண்டர்கள் போலி என்கவுண்டர்கள் என தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஏர்ஏசியாவின் சம்மர் அதிரடி ஆஃபர் டிக்கெட்கள்!

ஏர்ஏசியாவின் சம்மர் அதிரடி ஆஃபர் டிக்கெட்கள்!

ஏர்ஏசியா விமான நிறுவனம் உள்நாட்டு பயண டிக்கெட்களுக்கு அதிரடி சம்மர் ஸ்பெஷலாக விடுமுறை சலுகை கட்டணங்களாக ரூ.1,399 முதல் விமானப் பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது. இந்தச் சலுகை விலை டிக்கெட்களை 2018 ஏப்ரல் 29 வரை புக் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமான டிக்கெட் மூலம் முன்கூட்டியே புக் செய்து 2018 அக்டோபர் 31 வரை பயணம் செய்யலாம் ஏர்ஏசியா தெரிவித்துள்ளது
ரூ.15 லட்சம் எங்கே? மோடியின் தில்லாங்கடி வாக்குறுதி!

ரூ.15 லட்சம் எங்கே? மோடியின் தில்லாங்கடி வாக்குறுதி!

கடந்த தேர்தலின் போது, பாஜக வெற்றி பெற்றால் வாக்காளர்கள் வங்கி கணக்கில் ரூபாய் 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என மோடி கூறினார், இந்த பணம் மக்களுக்கு எப்போது கொடுக்கப்படும் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மோகன் குமார் சர்மா என்பவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளிக்க முடியாது என்று தகவல் ஆணையம் மறுத்துள்ளது. மேலும் இந்த விஷயம் ''தகவல்'' என்று பட்டியலில் கீழ் வரவில்லை என தெரிவித்துள்ளது
அதிக வலிமையுடன் ட்வின் டிஸ்க் பல்சர் 150!

அதிக வலிமையுடன் ட்வின் டிஸ்க் பல்சர் 150!

இளசுகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பஜாஜ் நிறுவனத்தில் அதிகமாக விற்பனையாகும் பைக் பல்சர்தான். இதில் புதுப்பொலிவுடன் ட்வின் டிஸ்க் பிரேக் கொண்ட பல்சர் அறிமுகமாகி உள்ளது. இது பைக் திறனை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி ஓட்டுபவரின் பாதுகாப்பு அம்சத்துக்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. தற்போது வரும் 150 cc பல்சரிலும் பின்புறம் 230 மி.மீ விட்டம் கொண்ட டிஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.