Short News

எடியூரப்பாவுக்கு நிபந்தனை விதித்த உச்சநீதிமன்றம்!

எடியூரப்பாவுக்கு நிபந்தனை விதித்த உச்சநீதிமன்றம்!

கர்நாடக முதலமைச்சராக பாஜகவின் எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்கக் கோரிய காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு ஏற்க மறுத்துவிட்டது. மேலும் நாளை 10.30 மணிக்கு எடியூரப்பா தனது ஆதரவு எம்.எல்.ஏக்களின் கடிதங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 
49 சதவீத சரிவில் டாடா மோட்டார்ஸ்!

49 சதவீத சரிவில் டாடா மோட்டார்ஸ்!

முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் மார்ச் 31 உடன் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் லபாத்தில் சுமார் 49.20 சதவீத லாபத்தில் சரிவடைந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் 4,336.43 கோடி ரூபாயை லாபமாக பெற்ற நிலையில், இந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் வெறும் 2,176.16 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது
யுஎம் ட்யூட்டி 230 பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

யுஎம் ட்யூட்டி 230 பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட பிரபல யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் விரைவில் புதிய க்ரூஸர் மாடல் பைக்கை செப்டம்பரில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த பைக் யுஎம் ட்யூட்டி 230 என்ற பெயரில் வெளியாகிறது. தற்போது 4 க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களையும், ஒரு மின்சார மாடலையும் யுஎம் நிறுவனம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த விழா ஓபிஎஸ்-க்கு ரொம்ப முக்கியமா?

இந்த விழா ஓபிஎஸ்-க்கு ரொம்ப முக்கியமா?

சென்னை நட்சத்திர ஹோட்டலில் இன்று நடைபெற்ற அதிமுக கட்சி நிர்வாகியின் மகள் பூப்புனித நீராட்டு விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ்,அமைச்சர்கள் ராஜேந்தி பாலாஜி, சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். ஆனால் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் தமிழக அரசு சார்பில் ஒரு அமைச்சர் கூட எட்டிப்பார்க்காத நிலையில் ஓபிஎஸ்,அமைச்சர்கள் பூப்புனித விழாவில் பங்கேற்றிருப்பது தமிழர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.