Short News

நாடு முழுவதும் வறட்சியின் கோரப்பிடியில் 153 மாவட்டங்கள்!

நாடு முழுவதும் வறட்சியின் கோரப்பிடியில் 153 மாவட்டங்கள்!

கோடைக்காலத்தின் உக்கிரம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக, நாட்டில் மொத்தமுள்ள 404 மாவட்டங்களில் 153 மாவட்டங்களில் கடும் வறட்சி ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலுள்ள பல மாவட்டங்கள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி20: புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த சென்னை!

டி20: புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த சென்னை!

புனேயில் இன்று நடந்த டி20 லீக் போட்டியைக் கைப்பற்றியதன் மூலம் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை சென்னை அணி பிடித்துள்ளது. இதுவரை ஆடிய 4 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று, 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது சென்னை அணி. இன்று நடந்த போட்டியில் சென்னை அணியின் ஷேன் வாட்சன் அபார சதம் அடித்ததன் மூலம், இன்றைய சிறந்த ஆட்டக்காரர் விருதை வென்றார்.
ஆப்பிளின் புதிய ஐபோன்கள்... விரைவில்?

ஆப்பிளின் புதிய ஐபோன்கள்... விரைவில்?

இந்த ஆண்டில் மட்டும் 3 ஐபோன்களை வெளியிட ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இவற்றில் ஒன்று ஐபோன் எஸ்.இ.2 ஆகும். வரும் 2018 ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் இந்தப் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜூன் 4 முதல் 8ஆம் தேதி வரை இந்த மாநாடு நடைபெற உள்ளது.
டி20 லீக்: ராஜஸ்தானை சுருட்டிய சென்னை!

டி20 லீக்: ராஜஸ்தானை சுருட்டிய சென்னை!

புனேயில் இன்று நடந்த டி20 லீக் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை அணி. 205 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி, 18.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்களை மட்டும் எடுத்தது. ஸ்கோர்: சென்னை-204/5 (20); ராஜஸ்தான்-140 (18.3)