Short News

தெரு நாய்கள் கடித்து 8 வயது சிறுவன் பலி!

தெரு நாய்கள் கடித்து 8 வயது சிறுவன் பலி!

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் 8 வயது சிறுவன் கோவிலுக்கு நடந்து சென்றுள்ளான். அப்போது அவனை அங்கு இருந்த தெரு நாய்கள் சூழ்ந்து கடித்து குதறியுள்ளது. அருகில் இருந்தோர் நாய்களை துரத்தியும் நாய்கள் அந்த சிறுவனை கடித்து குதறியது. இதில் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
அசத்தலான நோக்கியா X5 ஸ்மார்ட்போன்  ரிலீஸ்!

அசத்தலான நோக்கியா X5 ஸ்மார்ட்போன் ரிலீஸ்!

பிரபல ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா நிறுவனத்தை வாங்கியது முதல் பல புதிய மாற்றங்களுடன் பல ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது, இதில் ஏற்கனவே அறிவித்ததை போன்று நோக்கியா-X5 ஸ்மார்ட்போனை நேற்று சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 5.86 இன்ச் ஹெச்.டி ஃபுல் டிஸ்ப்ளே, 6 ஜிபி ரேம் மற்றும் 13 எம்பி, 5 எம்பி டூயல் பிரைமரி கேமரா உள்ளிட்ட சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஹரியானாவில் விஷவாயு தாக்கியதில் 4 பேர் பலி!

ஹரியானாவில் விஷவாயு தாக்கியதில் 4 பேர் பலி!

ஹரியானா மாநிலத்தில் உள்ள குருஷேத்ரா அமின் என்ற கிராமத்தில் விளை நிலம் அருகே பயோகாஸ் கசிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் காஸ் கசிவை சீர் செய்ய குழிக்குள் இறங்கிய பல்தேவ்சிங், தேவேந்தர் சிங், ஜொகிந்தர் சிங், ரூபேந்தர் சிங் ஆகிய 4 பேரும் விஷவாயு தாக்கியதில் பலியாகியுள்ளனர். இதுகுறித்து ஆடார்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
பழனி அருகே பள்ளி ஆசிரியை கழுத்தறுப்பு!

பழனி அருகே பள்ளி ஆசிரியை கழுத்தறுப்பு!

பழனி அருகே தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் மர்மநபரால் பிளேடு மூலம் கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த ஆசிரியை ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் அந்த மர்மநபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more