Short News

குழந்தையை கடித்து குதறிய தெருநாய்கள்: உ.பி.யில் தொடரும் அவலம்!

குழந்தையை கடித்து குதறிய தெருநாய்கள்: உ.பி.யில் தொடரும் அவலம்!

உத்தரபிரதேச மாநிலத்தில் தெருநாய்கள் கடிப்பதால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. நாய் கடித்ததில் கடந்த 6 மாதங்களில் 13 குழந்தைகள் உயிரிழந்துள்ளது. இந்நிலையில், கயிராபாத்தியில் தெரு நாய்கள் கடித்ததில் குழந்தை ஒன்று படுகாயம் அடைந்துள்ளது. குழந்தை மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. 
ரஷ்யாவில் இன்டர்வியூ செய்யும் ரோபோ!

ரஷ்யாவில் இன்டர்வியூ செய்யும் ரோபோ!

ரஷ்யாவில் வேரா எனும் ரோபோ நாள் ஒன்றுக்கு 1500 பேரை நேர்காணல் செய்து அசத்தி வருகிறது. வேலைக்கு ஆள் எடுக்கும் மனித வள மேம்பாட்டுத் துறை அதிகாரிகளுக்கு இந்த ரோபோதான் நேர்காணல் செய்கிறது. தற்போது 200 நிறுவனங்களில் இந்த ரோபோ பணி செய்துவருகிறது. நிறுவனத்துக்கு தேவையான ஊழியர்களை ஆன்லைனில் தேடி எடுத்து அவர்களின் ரெஸ்யூமை ஃபில்டர் செய்து தகுதியான நபர்களை தேர்வு செய்கிறது.
காற்று மாசை தடுக்க கலக்கல் ஐடியா!

காற்று மாசை தடுக்க கலக்கல் ஐடியா!

மீள்தன்மை கொண்டதும், முப்பரிமாண 3டி வடித்தையுடையதுமான ஒரு அமைப்பின் மூலம் காற்று மாசை தடுக்கும் தொழில்நுட்பம் உருவாகப்பட்டுள்ளது. இதனை சவுதியில் இருக்கும் கிங் அப்துல்லா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த முறையின் மூலம் செயற்கையான நுண்தன்மை கொண்ட மாசு பொருள்களை வடிகட்ட முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
இன்ஸ்டாகிராமில் அட்டகாசமான அப்டெட்!

இன்ஸ்டாகிராமில் அட்டகாசமான அப்டெட்!

இன்ஸ்டாகிராம் இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாகும். பிரபலங்களும், நடிகைகளும் அதிக அளவில் இந்த தளத்தை பயன்படுத்திவருகின்றனர். இன்ஸ்டாகிராம் தற்போது புதுப்புது அப்டேட்களை அளிக்கிறது. அந்த வகையில் ஒருவர் தான் எவ்வளவு நேரம் இன்ஸ்டா ஆப்பை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் எனும் வசதி விரைவில் வரவிருக்கிறது. இதை ஜேன் வாங்க் எனும் ஆப் கிரியேட்டர் உருவாக்கியுள்ளார்.