Short News

”ஸ்டாலினுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை!”

”ஸ்டாலினுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை!”

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் பாஜக தேசிய செயலர் எச். ராஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரி வாரியம் அமைக்காமல் மத்திய அரசு பொறுப்பை தட்டி கழிக்கவில்லை என அவர் கூறினார். 4 மாநிலங்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாத காரணத்தினால், மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளது என்றும் எச் ராஜா தெரிவித்தார். அரசியலில் என்ன செய்வது என தெரியாமல் ஸ்டாலின் உள்ளார் என்றும் எச் ராஜா கூறினார்.
சென்னையில் எஸ்.ஐ. தூக்கிட்டு தற்கொலை!

சென்னையில் எஸ்.ஐ. தூக்கிட்டு தற்கொலை!

சென்னை கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு துணை ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தார் ஜோசப். அவர் காசிமேடு மீன்பிடித் துறைமுகம் அருகே திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உடலைக் கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு எஸ்.ஐ. தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடா: பாதசாரிகள் மீது டிரக் மோதி 9 பேர் பலி!

கனடா: பாதசாரிகள் மீது டிரக் மோதி 9 பேர் பலி!

கனடாவின் டொரண்டோ நகரில் பாதசாரிகள் கூட்டத்திற்குள் ஒரு டிரக் வேகமாக வந்து மோதியது. இதில் 9 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்; 16 பேர் படுகாயமடைந்தனர். அந்த டிரக்கின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் டொராண்டோவில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ்கோடியில் தொடரும் கடல் சீற்றம்!

தனுஷ்கோடியில் தொடரும் கடல் சீற்றம்!

ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி பகுதியில் தொடர்ந்து 4ஆவது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதையடுத்து அப்பகுதிக்குச் செல்ல அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர். தென் கடல் பகுதிகளில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அப்பகுதி மீனவர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.