Short News

ஜீரோ டேவுக்கு ரெடியாகும் பெங்களூரு!

ஜீரோ டேவுக்கு ரெடியாகும் பெங்களூரு!

தென் ஆப்ரிக்க நகரமான கேப் டவுனில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லாத கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படவுள்ளது. கடைசி சொட்டு தீரும் நாளை ஜீரோ டேவாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த ஜீரோ டேவை சந்திக்கும் 11 நகரங்கள் பட்டியலை பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் பெங்களூரு நகரம் 2 வது இடத்தில் உள்ளது. பெங்களூரு நகரில் பாதிக்கும் மேற்பட்ட குடிநீர் வீணாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அமெரிக்கா செல்லும் தல, தளபதி!

அமெரிக்கா செல்லும் தல, தளபதி!

நடிகர் விஜய் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்டம் முடிந்த நிலையில், 2ம் கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நடிகர் அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கும் விசுவாசம் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் அமெரிக்காவில் சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 
உருவானது நேபாள கம்யூனிஸ்ட் கட்சி!

உருவானது நேபாள கம்யூனிஸ்ட் கட்சி!

நேபாளத்தில் இரண்டு பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருங்கிணைந்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சி என உருவாகியுள்ளது. இதில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி மாவோயிஸ்ட்- சென்டர் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்றது. தற்போது, இந்த கூட்டணி ஒன்றாக இணைந்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைத்துள்ளது.
நாசாவுக்கு 6 வயது சிறுமி எழுதிய கடிதம்!

நாசாவுக்கு 6 வயது சிறுமி எழுதிய கடிதம்!

நாசாவுக்கு கடிதம் எழுதி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் அந்த 6 வயது சிறுமி. புளூட்டோவை மீண்டும் கோள் என்று அறிவியுங்கள் என அந்த சிறுமி நாசாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள நாசா நாம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய வேண்டிய சுவாரஸ்யங்களை கொண்டிருப்பதுதான் புளூட்டோ என கூறியுள்ளது.