Short News

எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்தும் உலகின் முதல் கோயில்!

எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்தும் உலகின் முதல் கோயில்!

திருப்பதி கோயிலுக்கு ஆந்திர பிரதேச அரசு 50 எலக்ட்ரிக் கார்களை ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்தும் உலகின் முதல் கோயில் என்ற பெருமையை திருப்பதி பெறுகிறது. இதற்காக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும், டிரைவருக்கான ஊதியம் மற்றும் பராமரிப்பு செலவு என தனியாக மாதந்தோறும் ஒரு காருக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கவுள்ளது.
சினிமாவில் அரசியலை கைவிட்ட ரஜினி!

சினிமாவில் அரசியலை கைவிட்ட ரஜினி!

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் படமாக அமைந்தது. இந்நிலையில், தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்தில் வசனம், காட்சி எதிலுமே அரசியல் வேண்டாம் என்று ரஜினி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட சூட்டிங் டார்ஜிலிங் மலைப்பகுதியில் நடந்து வருகிறது.   
இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை நோக்கி இந்தியா: மோடி!

இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை நோக்கி இந்தியா: மோடி!

நாட்டின் பொருளாதாரம் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி நாட்டின் பொருளாதரத்தில் வரலாற்று சிறப்பு மிக்க மாற்றங்களை கொண்டுவர நிதி ஆயோக் குழு கூட்டம் ஒரு அடித்தளமாக இருக்கட்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

சேலம் 8 வழிச்சாலைத்திட்டம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகானை சென்னை சூளைமேட்டில் போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் தீவட்டிபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில், கொலை மிரட்டல், அரசுக்கு எதிராக மக்களை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more