Short News

கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா!

கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா!

பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில் வெறும் 104 சட்டமன்ற உறுப்பினர்களின் துணையோடு கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கர்நாடக ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் நாளை எடியூரப்பா தனக்கு எத்தனை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது என்பதை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.
வரலாற்றில் இன்று!

வரலாற்றில் இன்று!

சிலி கடற்படை தினம் இந்திய தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம்1859 - பிக் பென் மணிக்கூடு முதன் முறையாக இயக்கப்பட்டது.1904 - பாரீசில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது1991 - இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் இறந்த தினம் 1851 - கொலம்பியாவில் அடிமைத்தொழில் ஒழிக்கப்பட்டது.  
ஆப்பிள் மியூசிக்கை மிரள வைத்த யூடியூப்!

ஆப்பிள் மியூசிக்கை மிரள வைத்த யூடியூப்!

வரும் 22ம் தேதி புதிய மியூசிக் சேவை ஒன்றை அறிமுகம் செய்யவிருக்கிறது யூடியூப் நிறுவனம். ஆப்பிள் மியூசிக் சேவை போன்றவற்றை பின்னுக்குத் தள்ள இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேவை முதற்கட்டமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, மெக்ஸிகோ மற்றும் தென்கொரிய நாடுகளில் வரும் என்று தெரிகிறது. மாதக்கட்டணமாக 10 டாலர்கள் வரை வசூலிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. 
ஆழ்ந்து தூங்கும்போது நம்ம உயிர் எங்க போகுது தெரியுமா!...

ஆழ்ந்து தூங்கும்போது நம்ம உயிர் எங்க போகுது தெரியுமா!...

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது யாரையும் எழுப்பக்கூடாது என்று சொல்வார்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா. அதற்கு காரணம் பல ஆயிரம் கிமீ வேகத்தில் நம் உயிர் உடலிலிருந்து வெளியே சென்று மீண்டும் திரும்புவதனால்தானாம் என்று ஆத்ம சாத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இப்படி தூக்கத்தில் இருந்து ஒருவரை எழுப்பினால் அவர் மனநலம் பாதிக்ககூட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.