Short News

விவசாயிகள் பெயரில் பதவியேற்ற எடியூரப்பா!

விவசாயிகள் பெயரில் பதவியேற்ற எடியூரப்பா!

கர்நாடக மாநில முதல்வராக சற்றுமுன் பதவியேற்றுக் கொண்டார் எடியூரப்பா. அம்மாநில ஆளுனர் வாஜுபாய் வாலா அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடவுள் மற்றும் விவசாயிகள் பெயரில் முதல்வராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் எடியூரப்பா. அப்போது அங்கிருந்த பா.ஜ.க. தொண்டர்கள் அனைவரும் வாழ்த்துக் கோஷங்களை முழங்கினர்.
விஸ்வாசம் முதற்கட்ட படப்பிடிப்பு ஓவர்!

விஸ்வாசம் முதற்கட்ட படப்பிடிப்பு ஓவர்!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் நடிகர் அஜித். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தல் 4 வது முறையாக விஸ்வாசம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதனையடுத்து சிறிது ஓய்வு எடுக்கு அஜித் சென்னை வந்துள்ளார். 
ரஜினியின் மகளாகப் போவது யார்?

ரஜினியின் மகளாகப் போவது யார்?

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் மகள் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பொருத்தமான நடிகையை படக்குழுவினர் தீவிரமாக தேடி வருகிறார்களாம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ரஜினியின் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கதைப்படி ரஜினிக்கு மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
காலா நாயகி வெளியிட்ட புகைப்படம்!

காலா நாயகி வெளியிட்ட புகைப்படம்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நாயகனாக நடித்துள்ள படம் காலா. வரும் ஜூன் 7ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், இப்படத்தில் இரண்டு நாயகிகளுள் ஒருவராக நடித்துள்ள ஹூமா குரேஷி தனது டிவிட்டர் பக்கத்தில் காலா படப்பிடிப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், அதில், 'இனிமேலும் இந்தப் புகைப்படத்தை வெளியிட காத்திருக்க முடியாது' என அவர் தெரிவித்துள்ளார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more