Short News

சிரியா-ஈராக் எல்லையில் பயங்கரத் தாக்குதல்: 54 பேர் பலி!

சிரியா-ஈராக் எல்லையில் பயங்கரத் தாக்குதல்: 54 பேர் பலி!

சிரியா நாட்டின் ஈராக் எல்லையோரப் பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கப் படைகள் போர் விமானங்கள் மூலம் பயங்கரத் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 28 பொதுமக்கள் உள்பட 54 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியா போரைக் கண்காணித்து வரும் மனித உரிமைகள் குழு இத்தகவலைத் தெரிவித்துள்ளது.
கடும் சரிவுடன் நிறைவடைந்த பங்குச் சந்தைகள்!

கடும் சரிவுடன் நிறைவடைந்த பங்குச் சந்தைகள்!

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று பங்கு வர்த்தகம் கடும் இறக்கத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 217.86 புள்ளிகள் சரிந்து 36,323.77 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 82.05 புள்ளிகள் குறைந்து 10,936.85 புள்ளிகளாக இருந்தது.
விராலிகாடு பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை!

விராலிகாடு பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 75,000 கன அடியாக அதிகரித்த நிலையில் நீர்மட்டம் 90 அடியை எட்டியது. இதனால் இந்த அணையின் நீர்த்தேக்கமான விராலிகாடு பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஈராக்கியில் பரவிய போராட்டம்!

ஈராக்கியில் பரவிய போராட்டம்!

இளைஞர்கள்  மத்தியில் நிலவும்  வேலையில்லா திண்டாட்டம்,  அரசின் மீது உள்ள அதிருப்தி காரணமாக ஈராக் அரசை  கண்டித்து  அந்நாட்டு மக்கள்  போராட்டத்தில்  ஈடுபட்டனர்.  பஸ்ரா நகரில் நடந்த போரட்டத்தில் ஏராளமானோர்  கலந்து கொண்டு ஈராக் அரசுக்கு எதிராக  கோஷங்களை எழுப்பினர்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more