Short News

அட்லாண்டிக் பெருங்கடலில் ஏற்படும் அபாயகரமான மாற்றம்!

அட்லாண்டிக் பெருங்கடலில் ஏற்படும் அபாயகரமான மாற்றம்!

புவிவெப்பமயமாதல் காரணமாக அட்லாண்டிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நீரியல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் நீரோட்டத்தின் வேகம் என்பது குறைந்திருப்பதாக கண்டறிப்பட்டுள்ளது. மேலும் காற்று வெப்பநிலை, உப்பின் அடர்த்தி, நிலவின் ஈர்ப்பு விசை போன்றவற்றில் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
சவுதி அரேபியா அடுத்த அதிரடி: இந்தியர்களுக்கு பின்னடைவு!

சவுதி அரேபியா அடுத்த அதிரடி: இந்தியர்களுக்கு பின்னடைவு!

சவுதி அரேபியா நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் டாக்டர் அலி அல் கபீஸ், "அடுத்த ஹிஜ்ரி (Hijri) ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 12 துறைகளில் வெளிநாட்டுப் பணியாளர்கள் பணிபுரிய அல்லது தொழில் செய்யத் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இது இந்தியர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மறக்க முடியாத ரஜினி ஹூரோயின்

மறக்க முடியாத ரஜினி ஹூரோயின்

திரையுலகில் மறக்க முடியாத தென்னிந்திய நடிகை இருந்தவர் நடிகை சௌந்தர்யா. இவர் தமிழில் ரஜினியுடன் 'படையப்பா' படத்தில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் 12 வருடத்தில் 5 மொழிகளில் 100 படங்கள் நடித்துள்ளார். கடந்த ஏப்ரல் 17, 2004ல் பிஜேபிக்குப் பிரசாரம் செய்ய பெங்களூரிலிருந்து ஆந்திராவிற்கு சென்ற போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் சௌந்தர்யா உடல் கருகி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
ஹெச்.ராஜாவின் நாக்கில் சனி- பாரதிராஜா!

ஹெச்.ராஜாவின் நாக்கில் சனி- பாரதிராஜா!

கருணாநிதி மற்றும் அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாளையும், மகள் கனிமொழியையும் இழிவுபடுத்தி ஒரு கேவலமான ட்வீட் செய்திருந்தார் எச். ராஜா. இதற்கு நாக்கில் சனி பிடித்து, நாகரிகம் மறந்து பேசும் ஹெச்.ராஜாவின் பேச்சை கண்டிக்கிறேன் என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தை இழி சொல்லால், இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.