Short News

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpearvideocn%2Fvideos%2F975100252648658%2F&show_text=0&width=560" width="100%" height="300" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

உங்களை நம்ப முடியாது.. கைப்பையோடு ரயில் நிலைய ஸ்கேன் மெஷினுக்குள் நுழைந்த பெண்மணி!

நானே வேண்டுமானாலும் எக்ஸ்ரே மெஷினுக்குள் போவேனே தவிர கைப்பையை மட்டும் தர மாட்டேன் என கூறிய சீன பெண்மணி குறித்த வீடியோ வைரலாகியுள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த இதுபோன்ற எக்ஸ்ரே மெஷினுக்குள் செல்வது உடல்நலத்திற்கு பாதுகாப்பானது இல்லை என்று கூறி, தனது உடலைவிட பணத்திற்குத்தான் அந்த பெண்மணி, முக்கியத்துவம் கொடுத்ததாக சீன நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

‘சீமராஜா’ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘சீமராஜா’ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘ரஜினிமுருகன்' படத்தை தொடர்ந்து தற்போது பொன்ராம் இயக்கத்தில் 3வது முறையாக ‘சீமராஜா' என்ற படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா முதல் முறையாக நடித்து வருகிறார். இந்த படம் வரும் செப்டம்பர் 13ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
பில் கேட்ஸ் செலுத்தும் வரி எவ்வளவு தெரியுமா?

பில் கேட்ஸ் செலுத்தும் வரி எவ்வளவு தெரியுமா?

மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ் அமெரிக்க மதிப்பில் 90 பில்லியன் டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 9 ஆயிரம் கோடியை வரியாக செலுத்துவதாக கூறப்படுகிறதுய். இந்த வரி என்பது பில் கேட்ஸ் ஏற்கெனவே வாங்கிவைத்துள்ள சொத்து மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வருவாய் அடிப்படையில் செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
லாவண்யா போராடியது மெய்சிலிர்க்க வைக்கிறது- மு.க.ஸ்டாலின்!

லாவண்யா போராடியது மெய்சிலிர்க்க வைக்கிறது- மு.க.ஸ்டாலின்!

 குளோபல் மருத்துவமனையில் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஐடி ஊழியர் லாவண்யாவை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், "கொள்ளையர்கள் தாக்குதலில் காயமைடைந்த ஐடி ஊழியர் லாவண்யா குணமடைந்து பணிக்கு திரும்ப வேண்டும், தன்னத்தனியாக கொள்ளையர்களுடன் லாவண்யா தைரியமாக போராடியது மெய்சிலிர்க்க வைக்கிறது", என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.