Short News

கனடா பிரதமர் ஜஸ்டின் வருகை!

கனடா பிரதமர் ஜஸ்டின் வருகை!

கனடா  பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 6 நாள் அரசு முறை பயணமாக வரும் 17ம் தேதி இந்தியா வருகிறார். அன்றைய தினம், இந்திய ஜனாதிபதி  ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கின்றார். அவருடைய பயணத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதாரக்கொள்கை, அணு ஆயுதம், மருத்துவம் கல்வி, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.
விளம்பரங்களை அதிரடியாக முடக்கும் கூகுள் க்ரோம்!

விளம்பரங்களை அதிரடியாக முடக்கும் கூகுள் க்ரோம்!

தனது பிரௌசரான கூகுள் க்ரோமில் இனி எரிச்சலுட்டும் விளம்பரங்கள் வராது என கூகுல் நிறுவனம் அறிவித்துள்ளது. நல்ல விளம்பரங்கள் எது, மோசமான விளம்பரங்கள் எது, என்பதை கண்டறிந்து கூகுல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. வாடிக்கையாளர்களிடம் இருந்து தொடர்ந்து வந்த புகார்களை தொடர்ந்து கூகுல் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.
சாய் பல்லவியின் ‘கரு’ இசை வெளியீடு தெரியுமா?

சாய் பல்லவியின் ‘கரு’ இசை வெளியீடு தெரியுமா?

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் முதல் முறையாக பிரேமம் புகழ் சாய் பல்லவி நடிக்கும் ‘கரு' திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா பிப்ரவரி 24ம் தேதி நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, கரு என்ற படத்தலைப்பை லைக்கா நிறுவனம் பயன்படுத்தலாம் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
ஸ்டாலின், ஓ.பி.எஸ், வைகோ கூட்டு பேச்சு!

ஸ்டாலின், ஓ.பி.எஸ், வைகோ கூட்டு பேச்சு!

காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது, இந்த கூட்டத்தின் உணவு இடைவேளையின் போது ஒன்றாக அமர்ந்து எதிர்க்கட்சி தலைவர் மு.கஸ்டாலின், தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ், வைகோ மற்றும் வேல்முருகன் உரையாடியுள்ளனர். இதை நெட்டிசன்கள் கலாய்த்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்