Short News

ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்!

ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்!

ஏமனின் முக்கிய நகரான ஹூடேடாவை கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர். அந்த நகரை மீட்டெடுப்பதற்காக, அரசுப் படைகள் அங்கு பயங்கரத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஏமன் அரசுப் படைகளுடன் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 4 வீரர்களும், 22 ஹூதி கிளர்ச்சியாளர்களும் இதில் கொல்லப்பட்டுள்ளனர். ஏமன் தாக்குதல் தொடர்பாக ஐ.நா. அவசரக் கூட்டம் ஒன்றை இன்று நடத்துகிறது.
டார்ஜிலிங்கில் ரஜினிகாந்த் வில்லா #3!

டார்ஜிலிங்கில் ரஜினிகாந்த் வில்லா #3!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெற்று வருகிறது. இதற்காக அந்நகரில் உள்ள பிரபல குர்சேங் அலிடா எனும் ரிசார்ட்டில் தங்கியிருக்கிறார். இதனால் ஓட்டலின் உரிமையாளர் அந்த ரிசார்ட்டுக்கு 'ரஜினிகாந்த் வில்லா#3' என பெயர் சூட்டியுள்ளார். மேலும், அங்கிருக்கும் 'சாய் டீ பார்'க்கு தலைவா எனவும் பெயரிட்டு ரிசார்ட் உரிமையாளர் அசத்தியுள்ளார்!
வாக்குறுதியை மீறிய விஜய்: எச்சரித்த அன்புமணி ராமதாஸ்!

வாக்குறுதியை மீறிய விஜய்: எச்சரித்த அன்புமணி ராமதாஸ்!

விஜய்யின் 'சர்கார்' பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில், வாயில் சிகரெட்டோடு விஜய் இருக்கிறார். இனிமேல் படங்களில் சிகரெட் பிடிக்க மாட்டேன் என்ற வாக்குறுதியை அவர் மறுபடியும் மீறியிருக்கிறார் என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது. இதைப்பார்த்த அன்புமணி ராமதாஸ் "சிகரெட் இல்லாமல் இருந்தால் கூட இன்னும் நீங்கள் ஸ்டைலாக இருப்பீர்கள்" விஜய்க்கு அறிவுரை சொல்லி ட்வீட் செய்துள்ளார்.
பாஜகவை வரலாறு மன்னிக்காது: சிவசேனா சாடல்!

பாஜகவை வரலாறு மன்னிக்காது: சிவசேனா சாடல்!

காஷ்மீரில் தீவிரவாதம் கட்டுக்கடங்காமல் சென்றுவிட்ட பிறகு பிடிபிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றத்தை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என சிவசேனாவின் சாம்னாவில் விமர்சனக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. மேலும் எவ்வாறு இந்தியாவை துண்டாடிவிட்டு ஆங்கிலேயன் சென்றானோ அதேபோன்ற ஒரு நடவடிக்கையை பாஜக மேற்கொண்டுள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more