Short News

இஸ்ரேல் பிரதமர் மீது லஞ்ச, மோசடி வழக்குகள்!

இஸ்ரேல் பிரதமர் மீது லஞ்ச, மோசடி வழக்குகள்!

கடந்த 12 ஆண்டுகளாக இஸ்ரேலின் பிரதமராக இருந்து வருகிறார் பெஞ்சமின் நெதன்யாஹு. அவர் மீது புதிதாக லஞ்சம் மற்றும் நம்பிக்கை துரோக குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளன. அவர் மீது வழக்குகள் பதிவாகும் என போலீசார் கூறினாலும், அவையெல்லாம் ஒன்றுமில்லாமல் போகும் என நம்பிக்கையுடன் கூறியுள்ளார் 68 வயதாகும் நெதன்யாஹு.
கமலுக்காகத் திரளும் லட்சக்கணக்கான மக்கள்!

கமலுக்காகத் திரளும் லட்சக்கணக்கான மக்கள்!

இன்று தன் அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நடிகர் கமல்ஹாசனைக் காண லட்சக்கணக்கானோர் ராமநாதபுரத்தில் திரண்டனர். அவர்களிடையே பேசிய கமல், "உங்களுடைய அன்பு என்னும் வெள்ளத்தில் நீந்தத்தான் வந்தேன். மக்கள் வெள்ளம் தொடர வேண்டும்" என்றார். அடுத்ததாக தான் பிறந்த பரமக்குடியிலும் பேச உள்ளார் கமல்.
திமுகவினர் ஜோக்கர் -ஹெச்.ராஜா கிண்டல்!

திமுகவினர் ஜோக்கர் -ஹெச்.ராஜா கிண்டல்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்வதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதில், திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சியில் இன்று பங்கேற்க வந்துள்ள ஆளுநருக்கு திமுக,விசிகவினர் கருப்பு கொடி காட்டியுள்ளனர். இதற்கு "ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டுவதன் மூலம் ஜோக்கர் என்பதை திமுகவினர் காட்டிக்கொள்கின்றனர்" என்று விமர்சனம் செய்து ஹெச்.ராஜா ட்வீட் செய்துள்ளார்
ரயிலின் 'X' குறி பற்றி விளக்கம்!

ரயிலின் 'X' குறி பற்றி விளக்கம்!

இந்தியாவில் பஸ் போக்குவரத்து அதிகாரித்தாலும் இன்றும் பலரது விருப்பமாக ரயில் போக்குவரத்து இருந்து வருகிறது. நீண்ட தூர பயணங்களுக்காக பெரும்பாலும் ரயில் பயணத்தை தான் நாடுகின்றனர், இதற்கு காரணம் கழிப்பறை வசதி என்று பயணிகள் கூறி வருகின்றனர். இந்நிலையில், ரயில்வேயின் சில விஷயம் தெரியவருவதில்லை. இதில் ரயில் பின்புறம் இருக்கும் 'X' என்ற குறி எந்த பழுதும், பிரச்சனையும் இல்லை என்பதை தெரிவிக்கிறது.