Short News

சீனாவில் நிலநடுக்கம்:  பீஜிங் நகரம் ஆட்டம்!

சீனாவில் நிலநடுக்கம்: பீஜிங் நகரம் ஆட்டம்!

சீனாவில் ஹேபேய் மாகாணம் அருகே லங்பாங் நகரை மையமாக கொண்டு இன்று  மாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.3ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இருக்கும் சில கட்டிடங்கள் குலுங்கியதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
ஐஎப்எஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு: திண்டுக்கல் கார்த்திகாயினி சாதனை!

ஐஎப்எஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு: திண்டுக்கல் கார்த்திகாயினி சாதனை!

இந்திய வனப்பணி (ஐஎப்எஸ்) தேர்வு முடிவுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சற்றுமுன் வெளியிட்டது. இந்த தேர்வு முடிவுகள் http://www.upsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்திய அளவில் நடைபெற்ற ஐஎப்எஸ் தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகாயினி 12ஆம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.
தமிழ் ரசிகர்களே எனது இலக்கு: முத்த நாயகி பளிச்!

தமிழ் ரசிகர்களே எனது இலக்கு: முத்த நாயகி பளிச்!

தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடிக்க வேண்டும்  என்பதே  தற்போதைக்கான தனது  இலக்கு என அர்ஜூன் ரெட்டி பட நாயகி ஷாலினி  பாண்டே தெரிவித்துள்ளார். அர்ஜூன் ரெட்டி பட  வெற்றியை தொடர்ந்து  ஜீவாவுக்கு ஜோடியாக  கொரில்லா என்ற  படத்தில் அவர் தற்போது நடித்து  வருகிறார்.
ஆரியாவின் ’எங்க வீட்டு மாப்பிள்ளை’ ஏமாற்று வேலையா!

ஆரியாவின் ’எங்க வீட்டு மாப்பிள்ளை’ ஏமாற்று வேலையா!

திரைப்படங்களில் வாய்ப்பு குறைந்த காரணத்தால் தமிழ் சினிமா பிரபலங்கள் ரியால்டி தொடருக்கு தாவி வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை ஆரியா எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற புதிய தொடரை நடத்த இருக்கிறார். இது தமிழ் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் இளம்பெண்ணை நடிகர் ஆரியா உண்மையிலேயே திருமணம் செய்து கொள்வாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.