Short News

அமெரிக்கா தாக்க நாங்கள் தான் காரணம்: பிரான்ஸ்!

அமெரிக்கா தாக்க நாங்கள் தான் காரணம்: பிரான்ஸ்!

சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த பிரான்ஸ் தான் காரணம் என அந்நாட்டு அதிபர் எம்மானுவேல் மேக்ரன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேசிய இந்த தாக்குதலுக்கு சம்மதம் வாங்கியதாக மேக்ரன் கூறியுள்ளார். சிரியா அரசுக்கு பாடம் புகட்டும் வகையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏப்.27ல் 4 படங்கள் ரிலீஸ்!

ஏப்.27ல் 4 படங்கள் ரிலீஸ்!

திரையுலக வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் கடந்த வாரம் 'மெர்க்குரி' படம் வெளியாகியது. இந்த நிலையில் வரும் வாரம் 4 படங்கள் வெளியாக உள்ளன. 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', 'தியா', 'பக்கா', 'பாடம்' ஆகிய படங்களை வரும் 27ஆம் தேதி வெளியிட திரையுலக ஒழுங்குபடுத்துதல் குழு பரிந்துரைத்துள்ளது. இன்னும் ஏராளமான படங்கள் அடுத்தடுத்து வெளியாக வரிசை கட்டி நிற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகரிக்கும் ஒட்டகப் பாலின் மவுசு!

அதிகரிக்கும் ஒட்டகப் பாலின் மவுசு!

இந்தியாவில் ஒட்டகப் பாலின் விற்பனையும் வருவாயும் கடந்த 4 ஆண்டுகளில் அதிகரித்துள்ளன. கடந்த 2013-14ஐவிட 2017-18ஆம் ஆண்டில் ஒட்டகப் பால் விற்பனை 111 சதவிகிதம் உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 4 லட்சம் ஒட்டகங்கள் உள்ளன. இவற்றில் 82 சதவிகித ஒட்டகங்கள் ராஜஸ்தானில் இருக்கின்றன. ஆனாலும், ஒட்டகப் பாலை ஏற்றுமதி செய்ய முடியாத நிலைமைதான் உள்ளது.
இப்படி அடிக்கடி முகத்தில் பால் பருக்கள் வருதா?... இதை செஞ்சா வராது...

இப்படி அடிக்கடி முகத்தில் பால் பருக்கள் வருதா?... இதை செஞ்சா வராது...

உங்கள் முகம், கன்னம் அல்லது கண்களுக்கு அருகில் அல்லது முகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் சிறு சிறு வெள்ளை கட்டிகள் தோன்றுகிறதா? அவை பருக்கள் அல்லது வெள்ளை புள்ளிகள் போல் உள்ளதா ? அவை பருக்கள் அல்ல, நீங்கள் நன்றாக அதனைப் பார்த்தால் அது உங்களுக்கு தெரியும். அது தான் மிலியா என்று சொல்லப்பட்டும் பால் கட்டி. சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பதால் ஏற்படும் சரும மாற்றம், ரோசாசியா மற்றும் செபோர்ஹிக்