Short News

கார்னிவல் திருவிழாவில் ட்ரம்பை கேலி செய்த ஜெர்மனியர்கள்!

கார்னிவல் திருவிழாவில் ட்ரம்பை கேலி செய்த ஜெர்மனியர்கள்!

ஜெர்மனி நாட்டில் நேற்று ரோஜ் மன்டே கார்னிவல் என்ற பாரம்பரிய திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில், உலக அரசியல் தலைவர்களின் உருவ பொம்மைகளை கேலிக்கையாக சித்தரித்து வாகனங்களில் அணிவகுப்பு நடைபெற்றது. இதில், மிகவும் கேலிக்கையாக சித்தரிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பொம்மைகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.
மீண்டும் அஞ்சலியுடன் விஜய்சேதுபதி!

மீண்டும் அஞ்சலியுடன் விஜய்சேதுபதி!

மூன்றுக்கும் மேற்பட்ட படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய்சேதுபதி தற்போது மீண்டும் நடிகை அஞ்சலியுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். யுவன் தயாரிப்பு இந்த படத்தில் விஜய்சேதுபதி மற்றும் அஞ்சலி இருவரும் இணைந்து நடிக்க இருக்கின்றனர். பெயரிடப்படாத இந்த படத்தை தயாரிக்கும் யுவனே, இசையமைக்க இருக்கிறார்.
டி20 லீக்: ராஜஸ்தானுக்கு 168 ரன்கள் வெற்றி இலக்கு!

டி20 லீக்: ராஜஸ்தானுக்கு 168 ரன்கள் வெற்றி இலக்கு!

ஜெய்ப்பூரில் இன்று நடந்து வரும் டி20 லீக் கிரிக்கெட் போட்டியில், முதலில் ஆடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் சூரியகுமார் யாதவ் 72 ரன்களையும் இஷான் கிஷான் 58 ரன்களையும் குவித்தனர். 168 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் தற்போது களமிறங்கியுள்ளது ராஜஸ்தான் அணி. ஸ்கோர்: மும்பை-167/7 (20); ராஜஸ்தான்-6/0 (1)
கடல் சீற்றம் மீனவர்களுக்கு பாதுகாப்பு குடியிருப்பு!

கடல் சீற்றம் மீனவர்களுக்கு பாதுகாப்பு குடியிருப்பு!

கடல் சீற்றம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் குடியிருப்புகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மீனவ குடும்பங்கள் அரசு ஏற்பாடு செய்திருக்கும் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.