Short News

எக்ஸ்ரே இயந்திரத்தில் நுழைந்த இளம்பெண்!

எக்ஸ்ரே இயந்திரத்தில் நுழைந்த இளம்பெண்!

சீனாவின் கவுண்டாங் நகரத்தில் உள்ள நிலையத்தில் பயணிகளை எக்ஸ்ரே மெஷின் மூலம் போலீஸார் சோதனை நடத்தி வந்தனர். இதில், ஒரு  இளம் பெண் தனது பையை திருடி விடுவார்கள் என்றுக்கூறி உடமைகளை சோதனை செய்யும் எக்ஸ்ரே மெஷினில் தனது பையுடன் உள்ளே நுழைந்து சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ்ரேவில் பதிவான அந்த பெண்ணின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
இஷ்டப்படிதான் விற்போம்... ஒத்துழைக்க மாட்டோம்! - தியேட்டர் உரிமையாளர்கள் அடம்

இஷ்டப்படிதான் விற்போம்... ஒத்துழைக்க மாட்டோம்! - தியேட்டர் உரிமையாளர்கள் அடம்

தமிழ் சினிமாவில் மீண்டும் ஸ்ட்ரைக் அறிவித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம். ஆனால் தியேட்டர் உரிமையாளர்கள் இதற்கு ஒத்துழைக்க மறுத்துள்ளனர். தங்கள் இஷ்டப்படிதான் தியேட்டர் நடத்துவோம், டிக்கெட் விற்போம் என அடம் பிடிக்கின்றனர். இதனால் மீண்டும் திரையுலகில் ஆரோக்கியமற்ற போக்கு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒரு முடிவு ஏற்படுமா?

தஸ்வந்த் குற்றவாளி என நிரூபணம்! தண்டனை விவரம் ஒத்திவைப்பு!!

தஸ்வந்த் குற்றவாளி என நிரூபணம்! தண்டனை விவரம் ஒத்திவைப்பு!!

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஸ்வந்த் குற்றவாளி என செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அறிவித்தார். அவருக்கு 369, 360, 354 (பி) 302 மற்றும் 201 சட்டப் பிரிவுகளின் கீழ் தஷ்வந்துக்கு தண்டனை வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவருக்கு 1 மணி நேரம் கழித்து தண்டனை விவரத்தை தெரிவிப்பதாக கூறியுள்ளார். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
ரூ.2.30 கோடியில் போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய நரேன் கார்த்திகேயன்!

ரூ.2.30 கோடியில் போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய நரேன் கார்த்திகேயன்!

ஃபார்முலா- 1 பந்தய வீரரான நரேன் கார்த்திகேயன் புதிய போர்ஷே 911 ஜிடி3 காரை வாங்கி இருக்கிறார்.

இந்த காரில் 6 சிலிண்டர்கள் கொண்ட 4.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.இந்த எஞ்சின் அதிகபட்சமாக 493 பிஎச்பி பவரையும், 540 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய போர்ஷே காரை ரூ.2.30 கோடி விலை கொடுத்து நரேன் கார்த்திகேயன் வாங்கி இருக்கிறார்.