Short News

வரலாற்றில் இன்று!

வரலாற்றில் இன்று!

1889- உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் பிறந்த நாள்.1761 - பிரித்தானியர் பாண்டிச்சேரியை பிரான்சிடம் இருந்து கைப்பற்றினர்.1945 - இட்லர் தனது சுரங்க மறைவிடத்திற்கு தப்பிச் சென்றார்.1945 - கிட்லர் தனது சுரங்க மறைவிடத்திற்கு தப்பிச் சென்றார்.1946- சிரியா விடுதலை தினம். 
ரஜினியை சந்தித்த குருமூர்த்தி!

ரஜினியை சந்தித்த குருமூர்த்தி!

கட்சி தொடங்கவுள்ளதாகக் கூறியிருந்த நடிகர் ரஜினிகாந்த்தை 'துக்ளக்' ஆசிரியர் குருமூர்த்தி சந்தித்துள்ளார். சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில் வைத்து இந்தச் சந்திப்பு நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தது முதல் ரஜினியை பா.ஜ.க.வின் பிம்பம் என அரசியல் கட்சிகள் விமர்சித்துவருகின்றன. இந்நிலையில் இருவரும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நிர்மலாதேவி விவகாரம் : உதவி பேராசிரியர் முருகனிடம் விசாரணை!

நிர்மலாதேவி விவகாரம் : உதவி பேராசிரியர் முருகனிடம் விசாரணை!

நிர்மலா தேவி விவகாரத்தில் தலைமறைவாக இருந்த உதவி பேராசிரியர் முருகன் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். மதுரை காமராஜர் பல்கலை கழகத்திற்கு வருகை பதிவேட்டில் கையெழுத்திட வந்த போது அவரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு முதல் "ஹை- செக்யூரிட்டி நம்பர் பிளேட்" கட்டாயம்

அடுத்த ஆண்டு முதல் "ஹை- செக்யூரிட்டி நம்பர் பிளேட்" கட்டாயம்

வரும் 2019ம் ஆண்டு முதல் காரில் ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட் பொருத்துவது கட்டாயமாக்கப்பட இருக்கிறது. சமூக விரோதிகள் இதுபோன்று மாற்ற நினைத்து அகற்றினால், அந்த நம்பர் பிளேட் உடனடியாக அழிந்து விடும் வகையில், ஸ்நாப் லாக் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது. எனவேதான் இதற்கு ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட் என்று குறிப்பிடுவதற்கு முக்கிய காரணம்.