Short News

குழந்தையை தாயிடம் தர மறுத்த மருத்துவமனை!

குழந்தையை தாயிடம் தர மறுத்த மருத்துவமனை!

காபான் என்ற நாட்டில் பிரபல தனியார் மருத்துவமனையில் சோனியா ஓகோம் என்ற கர்ப்பிணி பெண் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டு இருந்தார். பின்னர், அவருக்கு பிறந்த குழந்தை 35 நாட்களாக இன்குபேட்டரில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் டிஸ்சார்ஜ் செய்யும் நாளில் ரூ.2.5 லட்சம் பில் தொகை செலுத்ததால் அம்மாவிடம் இருந்து குழந்தையை 5 மாதங்களாக மருத்துவமனை நிர்வாகம் பிரித்து வைத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. 
கலெக்டர் மற்றும் போலீஸ் மாநாடு அறிவிப்பு!

கலெக்டர் மற்றும் போலீஸ் மாநாடு அறிவிப்பு!

சென்னையில் முதல்வர் எடப்பாடி தலைமையில் மார்ச்.5,6,7 ஆம் தேதிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதுஇதில், மார்ச் 5ம் தேதி ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்கும் மாநாடு கூட்டமும், மார்ச் 6ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுக்கான மாநாடும், மார்ச் 7ம் தேதி காவல்துறை மாநாடும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கடன் எவ்வளவு தெரியுமா?

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கடன் எவ்வளவு தெரியுமா?

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கடன் சுமார் 4.6 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கடனை குறைக்க மத்திய அரசின் சிறப்பு குழு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. கடன் சுமையால் சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தற்போது இயங்க முடியாத சூழ்நிலையில் உள்ளது.
அமைதிக்கு ஏங்கும் மாலத்தீவு மக்கள்!

அமைதிக்கு ஏங்கும் மாலத்தீவு மக்கள்!

தனது அரசியல் அதிகாரத்தை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்ற ஒரே எண்ணம் உலகம் முழுவதும் சர்வாதிகாரிகளை அதிகரிக்க செய்கிறது. இதற்கு இந்தியா முதல் மாலத்தீவுவரை உதாரண சின்னங்களாக இருக்கின்றன. இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துமாறு மாலத்தீவு அதிபருக்கு ஐரோப்பியா நாடுகள், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.