Short News

ஈபிள் கோபுர பாதுகாவலர்கள் வேலை நிறுத்தம்!

ஈபிள் கோபுர பாதுகாவலர்கள் வேலை நிறுத்தம்!

பிரான்ஸ் நாட்டின் ஈபிள் கோபுரத்தில் பணிபுரியும் பாதுகாவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், அங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பணி காவலர்கள் மூன்று பேரை பணி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சுமார் 70 லட்சம் பேர் இந்த ஈபிள் கோபுரத்தை பார்வையிட்டு செல்கின்றனர்.
டெலிகாம் துறையை ஆளப்போகும் ஜியோ!

டெலிகாம் துறையை ஆளப்போகும் ஜியோ!

இந்திய தொலைத்தொடர்பு துறை ஆணையமான டிராய் அமைப்பு இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சந்தாதார்கள் தரவை வெளியிட்டு இருக்கிறது. டெலிகாம் மற்றும் வைர்லஸ் என இரண்டு சேவைகளுக்கான சந்தாதார்களும் அதில் இடம்பெற்று உள்ளது. அந்த அறிக்கையில் பிப்ரவரி மாதம் மட்டும் ரிலையன்ஸ் ஜியோவில் அதிகபட்சமாக 8.7 மில்லியன் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மன அழுத்தத்திற்கும் எடை அதிகரிப்பதற்கும் உள்ள தொடர்பு!

மன அழுத்தத்திற்கும் எடை அதிகரிப்பதற்கும் உள்ள தொடர்பு!

குடும்ப வாழ்க்கை மற்றும் வேலையில் ஏற்படும் நெருக்கடிகள் மன அழுத்தமாக மாறி உடல் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய கேடாக மாறி வருகிறது. உடல் எடை அதிகரிப்புக்கு உணவு செரிமானம் மிக முக்கிய பங்காற்றுகிறது. மன அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள், அதிக ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக்கொள்வதும், தவறான உணவு பழக்கங்களுக்கு அடிமையாவதும் தவிர்க்கப்பட வேண்டும்.
மும்பை அணியை பந்தாடிய ஹைதராபாத்!

மும்பை அணியை பந்தாடிய ஹைதராபாத்!

ஹைதராபாத் அணிக்கும், மும்பை அணிக்கும் இடையேயான ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத், 18.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 118 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 119 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது