Short News

புதிய கோளை தேடும் நாசா!

புதிய கோளை தேடும் நாசா!

நமது கேலசியை தாண்டி வெளியில் இருக்கும் கோள்களை கண்டறிவதற்கான பிரத்யேக செயற்கை கோளை நாசா நிறுவனம் விண்ணில் ஏவியுள்ளது. இந்த முக்கிய வேலை நமது சூரிய குடும்பத்தை தாண்டி மற்ற கேலக்சியில் இருக்கும் கோல்கள் தொடர்பான தகவல்களை திரட்டுவது என நாசா கூறியுள்ளது. இந்த கோள் ஏவப்பட்டதற்கு நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
திருச்சி அருகே தடம்புரண்ட பல்லவன் எக்ஸ்பிரஸ்!

திருச்சி அருகே தடம்புரண்ட பல்லவன் எக்ஸ்பிரஸ்!

காரைக்குடியிலிருந்து சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் இன்று காலை திடீரெனத் தடம்புரண்டது. திருச்சிக்கு வருவதற்குள், கிராப்பட்டி அருகே அந்த ரயிலின் என்ஜின் தடம்புரண்டு தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. அதை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. குறித்த நேரத்திற்கு அந்த ரயில் திருச்சி வந்து சேராததால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.
மன்சூர் அலிகான் விடுதலை!

மன்சூர் அலிகான் விடுதலை!

காவிரி மேலாண்மை வாரியம் கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது, சீமானுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்திய நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டார். கடந்த 13-ந் தேதி முதல் சென்னை புழல் சிறையில் மன்சூர் அலிகான் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்ததையடுத்து, இன்று சென்னை புழல் சிறையிலிருந்து மன்சூர் விடுதலை செய்யப்பட்டார்.
உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

உங்கள் ஊர்களில் தற்போதைய வெப்பநிலை!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று காலை 8.10 மணிக்குப் பதிவான வெப்பநிலை அளவுகள் (டிகிரி செல்சியஸில்) பின்வருமாறு: சென்னை-30; மதுரை-30; கோயம்புத்தூர்-28; திருச்சி-30; திருநெல்வேலி-28; திண்டுக்கல்-26; ஈரோடு-27; சேலம்-29; சிவகாசி-28; தஞ்சாவூர்-28; தூத்துக்குடி-28; திருப்பூர்-27; வேலூர்-27; ஊட்டி-16; கொடைக்கானல்-16; ஏற்காடு-23; ஏலகிரி-26; வேடந்தாங்கல்-30.