Short News

இனிமே நிம்மதியா தூங்கலாம் மக்களே- ட்ரம்ப் ட்வீட்!

இனிமே நிம்மதியா தூங்கலாம் மக்களே- ட்ரம்ப் ட்வீட்!

பலத்த பாதுகாப்பிற்கு இடையே சிங்கப்பூரில் வட கொரிய அதிபர் கிம் ஜாங்-அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பில் அணு ஆயுத சோதனை நடத்துவதை கைவிடுவதாக வடகொரியா அறிவித்தது. இந்நிலையில், "வடகொரியாவில் இருந்து இனி அணு ஆயுத அச்சுறுத்தல் இருக்காது, எல்லோரும் மிகவும் பாதுகாப்பாக இருப்பார்கள், நிம்மதியாக தூங்குவார்கள் என்று ட்ரம்ப் ட்வீட் செய்துள்ளார்
அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு பொருளாதார குற்றப்பிரிவி சம்மன்!

அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு பொருளாதார குற்றப்பிரிவி சம்மன்!

வருமான வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு பொருளாராத குற்றப்பிரிவு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு சிவக்குமார் இல்லத்தில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் 8.50 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரஜினி,ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு ஃபிட்னஸ் சேலஞ்ச் விடுத்த ஜக்கி!

ரஜினி,ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு ஃபிட்னஸ் சேலஞ்ச் விடுத்த ஜக்கி!

கடந்த மே மாதம் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்வர்தன் ரதோர் இந்த ஃபிட்னஸ் சேலஞ்சை துவக்கி வைத்தார். இதனையடுத்து கிரிகெட் வீரர் கோலி பிரதமர் மோடிக்கு சேலஞ்ச் விடுத்தார். இந்நிலையில், ஜக்கி வாசுதேவ் ஃபிட்னஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பின்னர் அவர் முதல்வர் ஈபிஎஸ், து. முதல்வர் ஓபிஎஸ், நடிகர் ரஜினிகாந்த், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கு ஃபிட்னஸ் சேலஞ்ச் விடுத்துள்ளார். 
பெங்களூரு மாநகராட்சி இடைத்தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் வெற்றி!

பெங்களூரு மாநகராட்சி இடைத்தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் வெற்றி!

பெங்களூரு மாநகராட்சியின் பின்னிப்பேட்டை வார்டில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளக்கட்சி வெற்றி பெற்றது. காங்கிரஸ் சார்பில் ஸ்ரீவித்யா, ஜனதா தளம் சார்பில் ஐஸ்வர்யா, பாஜக சார்பில் சாமுண்டேஸ்வரி என மும்முணைப் போட்டி நிலவியது. 1939 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஜனதாதள கட்சி வேட்பாளர் தோற்கடித்தார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more