Short News

வட கொரியாவின் ”ஆர்மி ஆஃப் பியூடிஸ்”: யார் இவர்கள்?

வட கொரியாவின் ”ஆர்மி ஆஃப் பியூடிஸ்”: யார் இவர்கள்?

வட கொரியாவில் ஆர்மி ஆஃப் பியூடிஸ் என அழைக்கப்படும் இளம் பெண்கள் குழு தற்போது தென் கொரியாவில் நடைபெற்று வரும் பனிகால ஒலிம்பிக் போட்டிக்கு வந்துள்ளனர். 20 முதல் 25 வயதே நிரம்பிய வட கொரியாவை சேர்ந்த அழகான இளம் பெண்கள் குழு, வட கொரிய அணியை ஆதரித்தும், தங்கள் அதிபர் கிம்மின் கொள்கையை பரப்புவதுமே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. இந்த பெண்களை வைத்து வடகொரியாவில் அரசியல் நகர்வுகள் நடப்பதாக கூறப்படுகிறது.
டெல்லி அணிக்கு 11 வது கேப்டனாகிறார் ஸ்ரேயாஸ் ஐயர்!

டெல்லி அணிக்கு 11 வது கேப்டனாகிறார் ஸ்ரேயாஸ் ஐயர்!

டி20 லீக் கிரிக்கெட் போட்டித் தொடரில் டெல்லி டேர்டெவி்ஸ் அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் வெற்றி, 5ல் தோல்வி அடைந்துள்ளது. மேலும், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில், தோல்விகளுக்கு பொறுப்பேற்று, கேப்டன் பதவியில் இருந்து கவுதம் கம்பீர் விலகினார். இதனையடுத்து 11 வது புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை!

காங்கிரஸ் தலைவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜ்போரா சவுக் என்ற இடத்தில் மறைந்திருந்த தீவிரவாதிகள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் குலாம் நபி பட்டேல் சுட்டுக் கொலை செய்துள்ளனர். மேலும், காரில் இருந்த பட்டேலின் பாதுகாவலர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முக்தி, முன்னாள், முதல்வர் ஓமர் அப்துல்லா உள்ளிட்ட பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மனைவி மீது அம்மிக்கல்லை போட்டு கொன்ற கணவன்!

மனைவி மீது அம்மிக்கல்லை போட்டு கொன்ற கணவன்!

சென்னை, வியாசர்பாடியில் கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் அப்துல் ஜாபர் என்ற நபர் நேற்றிரவு தூங்கி கொண்டிருந்த தனது மனைவியின் தலையில் அம்மிகல்லைப் போட்டு கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியின் உடலை கைப்பற்றியை போலீஸார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கணவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்