Short News

ஹபீஸ் சயீத் பயங்கரவாதி என பாகிஸ்தான் அறிவிப்பு!

ஹபீஸ் சயீத் பயங்கரவாதி என பாகிஸ்தான் அறிவிப்பு!

மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தொடர்புடைய ஜமாத் - உத் - தவா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தானில் பயங்கரவாதியாக அறிவிக்கும் சட்டத்தில் அந்நாட்டு அதிபர் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. பட்டியலில் இடம்பெற்றுள்ளான். மேலும் ஜமாத் - உத் - தவா அமைப்பை தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு என அறிவித்துள்ளது
நான் தான் அதிக வரியை செலுத்துகிறேன்: பில் கேட்ஸ்!

நான் தான் அதிக வரியை செலுத்துகிறேன்: பில் கேட்ஸ்!

என்னை விட பெரிய செல்வந்தர்கள் இருந்தாலும் நான் தான் அதிகமான வரியை செலுத்துவதாக பிரபல தொழிலதிபரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில் கேட்ஸ் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான ஆய்வின் அடிப்படையில் பார்த்தால் பில் கேட்சை அமேசான் நிறுவத்தின் சிஇஓவின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலரை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வைரலாகி வரும் அஜித்தின் 'ஸ்லிம்' போட்டோ!

வைரலாகி வரும் அஜித்தின் 'ஸ்லிம்' போட்டோ!

சிவா இயக்கத்தில் அஜித், 4வது முறையாக 'விசுவாசம்' படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்திற்காக அவர் தனது உடல் எடை குறைத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், ஸ்லிம்மாக இருக்கும் தோற்றத்துடன் அவ்வப்போது, அவருடன் ரசிகர்கள் போட்டோ எடுத்து வெளியிடுகின்றனர். இதில், ரசிகர் ஒருவர் 'விசுவாசம்' பட கெட்டப்பில் அவருடன் எடுத்த போட்டோ இன்று வைரலாகி வருகிறது.
குலுங்கிய மெக்சிகோ!

குலுங்கிய மெக்சிகோ!

மெக்சிகோவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக நிலநடுக்கபம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. நிலநடுக்கம் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து இதுவரை எவ்வித செய்தியும் வெளியாகவில்லை. இருப்பினும் பெரும்பாலான மக்கள் நில அதிர்வை உணர்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.